திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட கோரி கலிங்கப்பட்டி ஊராட்சி மன்றத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
அதனை ரத்து செய்து நெல்லை ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஊராட்சித் தலைவரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சகோதரருமான ரவிச்சந்திரன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
தொடர்ந்து வைகோவும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டங்கள் நடத்தி இருந்தார். வைகோவின் தாயாரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தி கடையை மூட செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இன்று உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையானது, நெல்லை ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையை நிரந்திரமாக மூட உத்தரவிட்டுள்ளது.
இது மதிமுகவினருக்கும் கலிங்கப்பட்டி ஊராட்சிக்கும், உண்ணாவிரதம் இருந்து டாஸ்மாக் கடையை அகற்ற போராடிய வைகோவின் தாயார் உள்ளிட்ட பொதுமக்களுக்குமான வெற்றியாகும்.
No comments:
Post a Comment