18.08.2017 மாலை கரூரில் மாவட்ட கழக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பங்கேற்றார்கள்.
நிகழ்வில் பேசிய வைகோ அவர்கள், தமிழக விவசாய சங்கங்கள் அழைத்த போதெல்லாம் நானும் மதிமுகவும் ஆதரவாக வந்தோம். இப்போது ஆகஸ்டு 21ம் தேதி சென்னையில், கர்நாடகம் அணை கட்ட தமிழக முதல்வர் அனுமதி கொடுத்ததை கண்டித்து முதல்வர் பதவி விலகவேண்டுமென்ற போராட்டத்திற்கு என்னோடு போராட வாருங்கள் என தமிழக விவசாய சங்கங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் காமராஜ் அவர்கள் ஏற்பாட்டில் 25க்கும் மேற்பட்டவர்கள் தங்களை மறுமலர்ச்சி தி.மு.கவில் இணைத்துக் கொண்டனர்.
மேலும், அதிக மதிப்பெண்கள் பெற்ற நமது கழக இயக்கத் தோழர்களின் இல்லத்து மாணவ-மாணவியர்க்கு நினைவு பரிசும் சான்றிதழ்களை கரூர் மாவட்ட மாணவரணி மற்றும் மறுமலர்ச்சி மாணவர் மன்றம் சார்பில் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் வழங்கினார்.
No comments:
Post a Comment