மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் திருவள்ளூர் மாவட்ட கழகம் சார்பில் 03-08-2017 அன்று சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகில், மெட்ரோ ரயில்வே துறைக்கு சொந்தமான தோராயமாக 7 ஏக்கர் நிலபரப்பில் கருவேல மரங்கள் அடர்த்தியாக காணப்பட்டன.
இதை அகற்ற பல முறை மதிமுக நிர்வாகிகள் மெட்ரோ ரயில்வே துறைக்கு மனு கொடுத்தும் அதை அகற்றாததால், மதிமுகவினர் சொந்த செலவிலே, பொதுமக்கள் நலனில் அக்கரை கொண்டு நிலத்தடி நீரை பாதுகாக, லட்ச ரூபாய் பொருட்செலவில், எந்திரங்கள் உதவியுடன் அகற்றினார்கள்.
காலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கருவேலம் மரங்கள் அகற்றும் பணியை தானே அகற்றி தொடங்கி வைத்ததோடு, தொண்டர்களோடு தொண்டனாக அகற்றினார். மேலும் ஜேசிபி எந்திரத்தையும் செயல்படுத்தி அகற்றினார்.
மேலும், சீமை கருவேல மரங்கள் அடர்த்தியாக உள்ள இந்த இடத்தை தேர்ந்தெடித்ததற்காக திருவள்ளூர் மாவட்ட செயலாளர் திரு.டி.ஆர்.ஆர் அவர்களுக்கு நன்றியும் தெரிவித்தார் வைகோ.
இந்நிலையில், வைகோ அவர்கள் சீமை கருவேல மரம் அகற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது அவ்வழியே சென்ற காஞ்சிபுரம் அய்யம்பேட்டையை சேர்ந்த ராஜசேகர் என்ற பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர், வைகோ அவர்களை பார்க்க வந்ததோடு மட்டுமல்லாமல் அவருடன் 5 நிமிடங்களுக்கும் மேலாக உரையாற்ற புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அப்போது அருகில் இருந்த இளைஞர் ஒருவர், வெற்றி தோல்வி பற்றி கண்டுகொள்ளாமல் நாளும் உழைக்கிறீர்கள். நீங்கள் தான் வாழும் அண்ணா என்று கூறினார்.
தொடர்ந்து கருவேலம் மரம் அழிப்பு பற்றி கருத்து கேட்ட இணையதள அணியினருக்கு பதிலளித்த அவர், வைகோ அவர்கள் நிலத்தடி நீரை சீரழிக்கும் மற்றும் பல தீமைகளை விளைவிக்கும் சீமை கருவேல மரத்தை ஒழிக்க போராடி வென்று நல்ல தீர்ப்பை வாங்கி இருக்கிறார். அவர் கும்பிட வேண்டிய இடத்தில் உள்ளார். ஆனால் மக்கள் அதை உணரவில்லை. கூடிய விரைவில் உணர வேண்டிய காலம் வரும் என்றார்.
மேலும் நான் எத்தனை தோல்விகள் கண்டாலும் ஓயாமல் போராடுவேன் தோல்வி கண்டு அஞ்ச மாட்டேன் என கூறினார். என்னை போன்ற இளைஞர்களுக்கு அவர் உந்து சக்தியாக திகழ்கிறார்.74 வயதிலும் இளைஞரை போல உழைக்கிறார் என்றார்.
மேலும் கூறுகையில், சிறு வயதில் எங்கள் ஊரில் நடைபயணம் வரும்பொழுது பார்த்துள்ளேன் அவரை பார்த்தால் போதும் என்று நினைத்தேன் ஆனால் பேசி புகைப்படம் எடுத்ததில் மிக்க மகிழ்ச்சி என்றார்.
இந்த சீமைகருவேலம் மரம் அகற்றும் பணியில் சென்னை சுற்றுவட்டார மாவட்ட செயலாளர்கள், ஏனைய நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டார்கள்.
No comments:
Post a Comment