திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் உடல் நலம் குன்றி 8 மாதங்களாக முழு நேர ஓய்வில் இருக்கிறார். அவரது உடல் நிலையை விசாரிக்க சில மாதங்களுக்கு முன், வைகோ அவர்கள் காவேரி மருத்துவமனை சென்ற போது திமுகவினர் வைகோவை தடுத்து நிறுத்தி, கல்வீசியதால் கருணாநிதி அவர்களை பார்த்து நலம் விசாரிக்க இயலாமல் போனது.
ஆனால் இன்று கருணாநிதி அவர்களின் வேண்டுகோள்படி, தலைவர் வைகோ அவர்களை கருணாநிதி குடும்பத்தார் கேட்டதால் தலைவர் வைகோ இன்று 22-08-2017 மாலை கோபாலபுரத்திலுள்ள கருணாநிதி இல்லம் சென்று நலம் விசாரித்தார்.
தலைவர் வைகோவை கண்டது கருணாநிதி புன்னகையுடன் வரவேற்றார். வைகோவுடன் திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட கழக முன்னணியினர் மட்டுமே இருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment