முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினரும், மதிமுக அரசியல் ஆலோசனை குழு உறுப்பினருமான, கா.சுப்ரவேலு அவர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சி சீர்காழியில் 16-08-2017 அன்று நடைபெற்றது.
கா.சுப்ரவேலு அவர்கள் திருவுருவ படத்தை திறந்து வைத்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார். மேலும் கா.சுப்ரவேலு அவர்கள் நினைவு புத்தகம் வெளியீடும் நடைபெற்றது.
சீர்காழி யில் மறைந்த ஐயா கா.சுப்ரவேலு அவர்கள் பட த் திறப்பு விழாவின் போது தலைவர் வைகோ அவர்களின் பேச்சு உணர்ச்சி மயமாக அமைந்திருந்தது. கூட்டத்தின் முடிவில் கா.சுப்ரவேலு அவர்களின் உறவினர் ஒருவர் வைகோவை சந்தித்து நன்றி தெரிவித்து புகைப்படம் எடுத்து கொண்டார்.
அந்த பெண்மணி பெயர் சிவ கவிதா. ஓவியர் மருது அவர்களிடம் பணிபுரிந்து வந்திருக்கிறார். அவர்கள் இன்று நம்மை தொடர்பு கொண்டு தலைவரை சிறு வயது முதலே கவனித்து வருவதாகவும் அவரது பணிகள் தம்மை கவர்ந்திருப்பதாகவும். விரைவில் நம் கழகத்தில் இணைந்து பணியாற்ற இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.
நிகழ்வில் பேசிய மதிமுக அமைப்பு செயலாளர் வந்தயதேவன் அவர்கள், எம்.ஜி.ஆர் அவர்கள் கூப்பிட்டும் செல்லாத ஐயா சுப்ரவேலு அவர்கள் பெரியாரின் கொள்கைகளை தாங்கி பிடிப்பவர் வைகோ ஒருவரே என்றுதான் மதிமுகவில் இணைந்து பணியாற்றியவர் என நினைவூட்டினார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசும்போது, தொண்டனுக்கு ஒரு கஷ்டம் என்றால் ஓடி வந்து உதவும் இயக்கம் மதிமுகதான்.
நாங்கள் அரசியலில் ஈடுபடாத கட்சி என்றால் பிரபாகரன் பாதையில் சென்று இருப்போம்.
செப்டம்பர் 15ல் நடைபெற இருக்கும் மதிமுக மாநாட்டிற்கு அண்ணன் சுப்ரவேலு அவர்கள் பெயர் வைத்திருக்கிறோம். பெண்கள் இளைஞர்கள் அனைவரும் வாருங்கள் என அழைப்பு விடுத்தார்.
அடுத்த ஆண்டு மதிமுகவின் வெள்ளி விழா ஆண்டு. அதை முன்னிட்டு கழகத்தில் தொடர்ந்து பொறுப்பில் பணியாற்றி வரும் கழக தோழர்களுக்கு நினைவுப் பரிசும் சான்றிதழும் வழங்கப்படும் என்று அறிவித்தார் வைகோ.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment