கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகரில், மதிமுக குமரி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இன்று 14-08-2017 மாலை 5 மணி அளவில், தலக்குளம் ரோட்டில் உள்ள குமார் மண்டபத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில், மறைந்த கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவரும், கழக சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினருமான சம்பத் சந்திரா அவர்களின் திருவுருப் படத்தை கழக பொதுச் செயலாளர் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் திறந்து வைத்து உரையாற்றினார்.
மேலும் மொட்டவிளை நிஷாந்த் அவர்களின் தலைமையில் 20 க்கும் மேற்ப்பட்ட புதிய இளைஞர்கள் தங்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டார்கள்.
பல கழக தோழர்கள் சங்கொலி சந்தாக்களை தலைவர் வைகோ அவர்களிடத்தில் நேரடியாக கையளித்தனர்.
செயல்வீரர்கள் கூட்டத்திற்கு முன்னதாக, மாதங்கி மணிகண்டன் அவர்கள் ஏற்ப்பாடு செய்திருந்த கொடிக்கம்பத்தில் கழக கொடியை ஏற்றி வைத்தார் தலைவர் வைகோ அவர்கள்.
உடன் மாவட்ட செயலாளர் வெற்றிவேல், துணை செயலாளர் ஆனந்த ராஜன், மகராஜபிள்ளை, மாநில மகளிரணி துணை செயலாளர், அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும், நெல்லை மாவட்ட நிர்வாகிகளும் இருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி














































No comments:
Post a Comment