Tuesday, August 22, 2017

எடப்பாடியை பதவி விலக கோரி போராட்டம் செய்து வைகோ உட்பட மதிமுகவினர் கைது செய்யப்பட்டு விடுதலை!

கர்நாடகா மேகதாதுவில் அணை கட்ட எடப்பாடி செய்த துரோகத்தை கண்டித்து அவர் பதவி விலக வேண்டி மதிமுகவினர் இன்று 21-08-2017 அன்று காலையில் சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடந்தது.

போராட்டத்திற்கு அனுமதி கேட்டு காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை. ஆனாலும் தடையை மீறி பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து முதல்வரை பதவி விலக சொல்லும் கோசங்களை எழுப்பி முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர்.

அப்போது போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தார்கள். அனைவரும் வாகனத்தில் ஏறிய பின்னர் வைகோ அவர்கள் வாகனத்தில் ஏறி கோசங்களை எழுப்பினார்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். அந்த மண்டபத்தை பயிற்ச்சி பாசறையாக மாற்றினார் வைகோ. சாஞ்சி அனுபவங்கள், ஈழபிரச்சினை, இந்திய துரோகம், த்ற்போதைய இந்திய தமிழக நிலை ஆகியவற்றையும் எடுத்துரைத்தார் வைகோ.

அவர் சேசும்போது, நேரடியாக பெரியாரை தாக்கி பேச முடியாதவர்கள் இன்று என்னை தாக்க முயற்சிக்கறார்கள்.


எனக்கு எதிரியாக இருக்க தகுதி வேண்டும்.


விடுதலை புலிகளிடமிருந்து காசு வாங்குவது ஈனப் பிழைப்பு என நினைக்கும் நான் எங்கே!

அவர்கள் பெயரைச் சொல்லி கோடிகணக்கில் கொள்ளையடிக்கும் புரட்டுக் கார்ர்கள் எங்கே! 


நான் ஒரு சேகுவாரா. நான் மத யானைகளை எதிர்த் தே பழக்கப்பட்டவன், கொசுக் களை எதிர்த்து அல்ல.


எனக்கு யாரும் அக்மார்க் தமிழன் என்று சான்றிதழ் தரத் தேவையில்லை.

நான் உயிருக்கு அஞ்சாத போராளி. 

கைதை தொடர்ந்து வைகோ பதிவேட்டில் கையெழுத்திட்டார். கைது செய்யப்பட்ட அனைவரும் கையெழுத்திட்டனர்.

அந்த நிகழ்வில், புதிதாக நியமிக்கப்பட்ட, ஆபத்து உதவிக்குழுத் தலைவர் அரவக்குறிச்சி கலையரசன் அவர்களுக்கு தலைவர் வைகோ பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்கள். 100 பேரை தயாரிக்கவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்கள்.

ஆபத்து உதவி குழுக்கு கருப்பு மஞ்சள் வண்ண சட்டையும் இருக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

மாலையில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலையானார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment