NEET தேர்வை எதிர்த்து சென்னை சுங்க அலுவலகம் முற்றுகையில் மதிவிகவினர் கைது செய்யப்பட்டு மாலை விடுதலை!
மருத்துவ படிப்பிற்கான NEET நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்று இன்று 10-07-2007 காலை மதிமுக மாணவரணியினரால் சுங்கசாவடியை முற்றுகையிடும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மதிமுகவின் மாணவர் அணியினரும், மாணவர் மன்றமும் கலந்துகொண்டு வீர முழக்கங்களை எழுப்பினார்கள்.
மதிமுக மாணவரணி முற்றுகை போராட்டம் துவக்க நிலையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
தொடங்குகின்ற நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டார். பின்னர் ஆர்ப்பாட்ட முழக்கங்களை அவரே எழுப்பினார்.
NEET ஐ தடை செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பினார். தொண்டர்களும் உரக்க சொன்னார்கள். இந்த போராட்டத்திற்கு ஏன் தடை விதிக்கப்பட்டது எனவு கேள்வி எழுப்பினார்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில், நீட் அரக்கன் கொடும்பவியை வைகோ அவர்கள் கொழுத்தி கோசங்கள் எழுப்பினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தால் கலந்துகொண்ட மதிமுகவினர் அனைவரும் கைது செய்யப்பட்டு அரசு பேருந்துகளில் கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் சென்னை ஸ்ரீ பாலஸ் என்ற மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய தலைவர் வைகோ அவர்களும் பதிந்தார்கள்.
அந்த கைதை தலைவர் வைகோ அவர்கள் பயிற்ச்சி பாசறையாக மாற்றினார். தன் மாணவ பருவங்களை பகிர்ந்துகொண்டார். பலரும் உரையாற்றினார்கள். மாணவர்களையும் உரை நிகழ்த்த அழைத்ததோடு, மாணவ தோழர்களே என தொடங்கினால் போதும் எனவும் வேண்டுகோள் வைத்தார். ஏராளமான மாணவர்கள் உரையாற்றினார்கள்.
அப்போது பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் மாண்வர்கள், தலைவர் வைகோ அவர்களை காண ஆவலுடன் வந்து சந்தித்து பேசினார்கள்.
தொடர்ந்து போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை வாழ்த்தி பேசிய வைகோ அவர்கள், மாணவர்களிடையே போர்க் குணம் குறைந்து வருவது பற்றி கவலை தெரிவித்தார்.
No comments:
Post a Comment