Saturday, August 26, 2017

நெல்லையில் தென்மண்டல மதிமுக மாணவர் அணிக் கூட்டம்!

தென் மண்டல மதிமுக மாணவர் அணிக் கூட்டம், மாநில மாணவர் அணிச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் அவர்களின் தலைமையில் நெல்லை புறநகர் மாவட்ட கழக அலுவலகமான சரஸ்வதி லாடஜ் 52 ஆம் எண் அறையில் இன்று 26-08-2017 எழுச்சியுடன் நடைபெற்றது. 

நெல்லை புறநகர் மாவட்ட கழக செயலாளர் தி.மு.இராசேந்திரன் திருமலாபுரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உணர்ச்சியுரை ஆற்றினார். 

மாநில துணைச் செயலாளர்கள் முகவை செல்வராஜ், மகேஷ் சங்கர், சத்தியகுமாரன், மாவட்ட மாணவர் அமைப்பாளர்கள் மதியழகன், புகழ்முருகன், ஷாஜி, கண்ணன், ஜவகர், நெல்லை மாநகர் வெற்றிவேந்தன் மறுமலர்ச்சி மாணவர் மன்றத்தின் சார்பில் பால.சசிகுமார், மாரிச்சாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

கலிங்கப்பட்டி தொடங்கி மாநாடு நடைபெறுகிற தஞ்சை வரையிலான வாகன பரப்புரை பயணத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.


தகவல்: பால சசிகுமார்

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment