தக்கலை ஒன்றிய மாணவர் அணி சார்பில் நடைபெற்ற NEET தேர்விற்கு எதிரான பரப்புரை பிரச்சாரப் பயணம் இன்று 12-08-2017 நடைபெற்றது.
காலையில் தொடங்கிய இந்த பிரச்சாரம் மாவட்ட செயலாளர் வெற்றிவேல், துணை செயலாளர் ஆனந்தராஜன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
மாநில மாணவர் மன்ற செயலாளர் பால.சசிகுமார் எழுச்சியுரையாற்றினார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சாஜி முன்னிலையில், தக்கலை ஒன்றிய மாணவரணி செயலாளர் ஜேன்.ஜெபர்சன் தலைமை வகித்தார்.
பிரச்சாரம் வாகனத்தில் தொடங்கி ஊராக சென்று இறங்கி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி வருகிறார்கள்.
அதில் தக்கலை, மணக்காவிளை, கோளிப்போர்விளை, பள்ளியாடி, அழகிய மண்டபம், மார்த்தாண்டம் மற்றும் பல இடங்களில் தெரு முனை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வில், தொண்டர்படை அமைப்பாளர் சுமேஷ், இளைஞரணி அமைபாளர் பள்ளியாடி குமார், சுடலை, பொறியாளர் அணி அமைப்பாளர் சுரேஷ் குமார், தலைமை கழக பேச்சாளர் அனல் கண்ணன், தக்கலை ஒன்றிய செயலாளர் ஜே.பி.சிங், நாகர்கோயில் நகர செயலாளர் ஜெரால்டு, மாநில மாணவரணி துணை அமைப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்ட ஏராளமான குமரி மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment