மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இன்று 09-08-2017 காலை 11 மணி அளவில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்.
அப்போது பேசிய வைகோ அவர்கள், ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கிற வேலையை செய்கிறார் மோடியும் அமித்சாவும் என்றார்.
மேலும், உலகமெங்கும் மோடி பெருமை பேசுகிறார். ஆனால் மாநிலங்களுக்கிடையே கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.
இப்போதைய தேர்தல் கமிஷன் மேல் நம்பிக்கை வருகிறது
அருணாச்சலம் மணிப்பூர் நாகாலாந்து மாநிலங்களில் குதிரை பேரம் நடத்தி பாஜக ஆட்சியை பிடித்தது. அது தமிழகத்தில் நடக்காது.
மேகத்தாட்டுவில் எப்படியும் அணை கட்டுவோம் என்ற கர்நாடக அமைச்சருக்கு கண்டனம்.
ஜெம் லேபின் இயந்திரங்களை இயங்க விட மாட்டோம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பழங்கால சிலைகளை அகற்ற கூடாது.
அடக்குமுறையை பாசிச போக்கை கடைபிடிக்கிறது எடப்பாடி அரசு.
தடை என்றாலும் நாளைய நீட் குறித்த மாணவரணி போராட்டம் தொடரும். நீட் பிரச்சினைக்காக தடையை மீறி எனது தலைமையில் நாளை சுங்கத்துறை அலுவலகத்தை முற்றுகை இடுவோம்.
15ஆம் தேதி சுதந்திர விழா கொண்டாட்டங்களுுக்கு 10ஆம் தேதியே தடை என்ன வேண்டி இருக்கிறது.
தமிழ்நாட்டில் பாஜக கால் ஊன்ற முடியாது. இது திராவிட பூமி.
தகவல்: இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன்
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment