Tuesday, March 31, 2015

மதிமுக இணையதள நண்பர்களுக்கு ஒரு விரிவான வேண்டுகோள்!

அன்பு உடன்பிறப்புகளே! இந்த முகநூல் பக்கத்தை share செய்து, உங்கள் நண்பர்களுக்கும் invite செய்யுங்கள். இந்த பக்கம் பலரது பார்வையில் பட்டால், தலைவரின் அன்றாட நிகழ்வுகள் மக்களின் மனதில் பதிய வாய்ப்பாக அமையும். அதன் மூலம் சிறு மாற்றத்தையாவது உருவாக்க முயற்ச்சிப்போம். எனவே இந்த பக்கத்தை யாரெல்லாம் விருப்பம் தெரிவித்திருக்கின்றீர்களோ, தாங்கள் எல்லோரும், தங்களுடைய நண்பர்களுக்கும் invite செய்து like செய்ய வேண்டுமாறு கேட்டுகொள்கிறோம்.

"முயர்ச்சியுடையார், இகழ்ச்சியடையார்"

மதிமுக இணையதள அணி - ஓமன்

அரியலூரில் சந்தா சேகரிப்பில் பம்பரமாக சுழலுகிறார் வைகோ!

மே மாதம் வெளியாகவிருக்கின்ற தமிழ் நாளிதழ் சந்தா சேகரிப்பு அரியலூரில் நடந்தது, தலைவர் அவர்கள் புதுக்கோட்டையில் நடந்த சந்தா வழங்கும் நிகழ்ச்சியை முடித்துகொண்டு அரியலூரில் கலந்துகொண்டார். அங்கும் ஏராளமான தொண்டர்கள் வருட சந்தாக்களை வழங்கினர். இந்த நிகழ்வில் கழக முன்னோடிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

புதுகோட்டை தின நாளிதழ் சந்தா வழங்கும் நிகழ்ச்சியில் வைகோ!

வருகிற மே மாதம் 1 ஆம் தியதி முதல் தமிழகத்தில் வெளியாகவிருக்கின்ற தமிழ் நடுநிலை நாளேடானது  தினசரி பத்திரிகையாகும். இந்த பத்திரிகைக்கான வருட சந்தா செர்ப்பு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது. புதுகோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற சந்தா சேகரிப்பு நிகழ்ச்சியில் தலைவர் வைகோ சிறப்புரையாற்றினார். ஏராளமானோர் வருட சந்தாவிற்கான தொகையை தலைவரிடத்தில் கையளித்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக யாராவது சந்தா செலுத்த விரும்பினால், எங்களை தாராளமாக தொடர்பு கொண்டு எங்கள் மூலமாக சந்தா செலுத்தலாம் என கெட்டுகொள்ள படுகிறார்கள்.

அலைபேசி இலக்கம்;+96895484987
மதிமுக இணையதள அணி - ஓமன்

சென்னையில் ஐயா லீ குவான் யூ புகழஞ்சலி!

மதிமுக இணையதள நண்பா்களால் சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை, மறைந்த சிங்கப்பூாின் தந்தை என்று அழைக்கப்படும் ஐயா லீ குவான் யூ அவா்களுக்கு புகழஞ்சலி கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வில் மதிமுக நண்பா்கள் மட்டுமல்லாமல் பிற கட்சி நண்பா்களும் நடுநிலையாளா்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கிறோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

Monday, March 30, 2015

திருப்பூரில் தினசரி நாளிதழ் சந்தா தொகை அளிக்கும் விழா!

மதிமுக அவை தலைவர் திருப்பூர் துரைசாமி அவர்கள் தலைமையில் வருகிற மே மாதம் 1 ஆம் தியதி முதல் தமிழகத்தில் வெளியாகவிருக்கின்ற  இமயம் குழுமத்தின் நடுநிலை தமிழ் நாளேட்டின் சந்தா தொகையளிக்கும் விழா இனிதே நடைபெற்றது.

திருப்பூர் ராமசாமி கவுண்டர் முத்தம்மாள் திருமணமண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில், தலைவரே சந்தா சேகரிப்பின் நிலைமையை எடுத்து கூறி சந்தா அளித்தவர்களின் தொகையையும் பெற்றுகொண்டார்.

திருப்பூர் மாவட்ட செயலாளர் தலைவரின் தளபதிகளில் ஒருவரான அருமை சகோதரர் R.T.மாரியப்பன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இதில் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும், கழக தொண்டர்களும் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக யாராவது சந்தா செலுத்த விரும்பினால், எங்களை தாராளமாக தொடர்பு கொண்டு எங்கள் மூலமாக சந்தா செலுத்தலாம் என கேட்டுகொள்ளப் படுகிறார்கள்.

அலைபேசி இலக்கம்;+96895484987
மதிமுக இணையதள அணி - ஓமன்

மறைந்த மதிமுக நிர்வாகி குடும்பத்திற்கு வைகோ ₹125000 உதவி!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் மதிமுக ஒன்றிய அவைத்தலைவர் சின்னசாமி சமீபத்தில் காலமானார். அவரது இல்லத்திற்குச் சென்ற மறுமலர்ச்சி திமு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்து, மதிமுக ஒன்றியக் கழகம் சார்பாக ₹125000 ஆயிரம் ரூபாய் நிதி உதவியையும் வழங்கினார். இதில் மதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.மாரியப்பன் உடன் உள்ளார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

கோவையில் தின நாளிதழ் சந்தா சேர்ப்பு-வைகோ தலைமை!

வருகிற மே மாதம் 1 ஆம் தியதி முதல் தமிழகத்தில் வெளியாகவிருக்கின்ற நடுநிலை நாளேடானது இமயம் குழுமத்தில் இருந்து வெளியாகும் தினசரி பத்திரிகையாகும். இந்த பத்திரிகைக்கான வருட சந்தா செர்ப்பு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது. மதிமுகவின் நற்செயல்பாடுகளை அதன் செய்திகளை அனைத்து பத்திரிகைகளும் இருட்டடிப்பு செய்து மதிமுகவினர் மக்களுக்கு செய்யும் நன்மைகளை மக்களிடத்தில் கொண்டுபோகவிடாமல் பார்த்துகொள்கின்றனர். இதனால் இமயம் குழுவினர் நடு நிலை நாளேட்டை வெளியிட்டு இருட்டடிப்பு செய்யப்படும் நற்செய்திகளையும் வெளியிட முடிவு செய்துள்ளனர். இதற்கான சந்தா சேகரிப்பு நிகழ்ச்சிகளை தலைவர் வைகோ அவர்களும் துரிதமாக செய்து சந்தாக்களை சேகரித்து வருகிறார். இன்றும் கோவை மாவட்டத்திலே சந்தா சேகரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவரே சந்தா சேகரிப்பின் நிலைமையை எடுத்து கூறினார். இதில் இமயம் குழுமத்தின் நிறுவனர் இமயம் ஜெபராஜ் அவர்களும், மாநில இளைஞரணி செயலாளர் மதிப்பிற்குரிய சகோதரர் ஈஸ்வரன் அவர்களும், மற்றும் பிற முக்கிய நிர்வாகிகளும், கழக தொண்டர்களும் கலந்துகொண்டு சிறப்பாற்றினர்.

ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக யாராவது சந்தா செலுத்த விரும்பினால், எங்களை தாராளமாக தொடர்பு கொண்டு எங்கள் மூலமாக சந்தா செலுத்தலாம் என கெட்டுகொள்ள படுகிறார்கள்.

அலைபேசி இலக்கம்;+96895484987
மதிமுக இணையதள அணி - ஓமன்

Sunday, March 29, 2015

ஈரோடு மற்றும் கரூர் மாவட்ட சந்தா சேர்ப்பில் வைகோ!

இமயம் குழுமத்திலிருந்து, மே மாதம் 1-ஆம் தியதி முதல் வெளியாகவிருக்கும் தினசரி நாளேடுக்கான சந்தா சேர்ப்பு நிகழ்ச்சிகள் ஈரோடு மற்றும் கரூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான மதிமுக தொண்டர்களும் பொது மக்களும் கலந்துகொண்டு சந்தா கொடுப்பதற்கான முயற்ச்சிகளை மேற்கொண்டனர். தலைவர் வைகோ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

கரூர் மாவட்ட சந்தா சேர்ப்பு நிகழ்ச்சி!

Saturday, March 28, 2015

காவிரிக்கு குறுக்கே மேகதாது அணைக்கு மதிமுக எதிர்ப்பது ஏன்?

கூகுள் முப்பரிமாண வரைபடத்தில், வனத்தில் பாய்ந்து தமிழ்நாட்டுக்குள் நுழையும் காவிரியை ஆராய்ந்தபோது... வனத்தடத்தில் வரும் காவிரியாறு ‘ஆடுதாண்டும் காவிரி’ என்ற பகுதியில் மலைமுகடுகளுக்கிடையில் குறுகலான பாறையிடுக்குகளில் புகுந்து வருகிறது.

சிவசமுத்திர அருவியில் தொடங்கி மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதிவரை காவிரி பாய்வது மலைகளுக்கிடையேதான். திருச்சிக்கருகில் அகண்ட காவிரி ஆவதும், இம்மலைப் பகுதியில் ஆடுதாண்டும் காவிரியாவதும் நாம் பள்ளியில் படித்த பாடங்கள். மேக என்றால் ஆடு. தாடு என்றால் தாண்டு.

‘மேகதாடு’ எனப்படும் ஆடுதாண்டும் காவிரிப் பகுதியில் மலை முகடுகளுக்கிடையில் தடுப்புச் சுவர் எழுப்பினால் அது அணையாகிவிடும். அங்கே எழுப்பப்படும் மிகச்சிறிய கட்டுமானத்தின் மூலம், காவிரியின் குரல்வளையை இறுக்கிக்கட்டுவது போன்ற எளிய செயல் மூலம், ஆற்றின் முழுத் தண்ணீரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்தைக் கர்நாடகம் நிறைவேற்றிக்கொள்ளும்.

மேகதாடுவில் அணைச்சுவர் எழுப்பப்பட்டால், அணையின் நீர்கொள்ளும் பரப்பளவாக, நாம் கற்பனை செய்தே பார்த்திராத அளவு, மலைகளுக்கிடைப்பட்ட பள்ளங்களில் கிடைத்துவிடும். இணைப்பில் உள்ள படத்தில் எங்கே அணைச்சுவர் கட்டப்படலாம் என்பதைக் கறுப்பிலும், அணை கட்டப்பட்டால் நீர்தேங்கும் பகுதியாய் எவை இருக்கக்கூடும் என்பதை நீலத்திலும் குறித்துள்ளேன்.

இதில் தொண்ணூறு டிஎம்சிக்கும் மிகுதியான தண்ணீரைத் தடுத்துவைக்க முடியும் என்று படித்தேன். மேட்டூர் அணையின் கொள்ளளவு 93 டிஎம்சிகள்தாம். கர்நாடகத்தின் இம்முயற்சி மேட்டூர் அணையை அப்படியே தம் மாநிலத்திற்குள் கட்டிக்கொள்வதைப் போன்றதுதான். இது காவிரியின் நீர்கோள் அனைத்தையும் தன்னுடையதாக்கிக்கொள்வதேயன்றி வேறில்லை. நமக்குரியதைப் பறிக்க முயல்வதைப் போன்றது இம்முயற்சி.

மழைப்பொழிவு வற்றிக்கொண்டே வரும் தொழிற்காலகட்டமாகிய இத்தருணத்தில் ஆற்றின் நீரை, அதற்கு உரிமைப்பட்டவர்கள் நீதியின்படி பங்கு பிரித்துக்கொள்வதுதான் உடனடித் தீர்வு.

இது விவசாயியின் பிரச்சனையன்று. ஒரு மிடறு தண்ணீர் குடிக்கின்ற ஒவ்வொருவர்க்கும் நேர்ந்துள்ள ஆபத்து என்பதை உணர்க.

காவிரியில் நீர்ப்பாய்வு இல்லையேல், அவ்வாற்றின் இருமருங்கும் இருநூறு கிலோமீட்டர்கள் தொலைவு வரையுள்ள தமிழ்நிலங்கள் நிலத்தடி நீரற்றதாகும். இச்செய்தி பலர்க்கு வியப்பாக இருக்கக்கூடும். ஆனால் அதுதான் உண்மை.

நிலத்தடி நீர்க்கால்களின் வலைத்தொடர்பு நாம் கருதியிருப்பதைவிடவும் அகன்று பரவியிருப்பது. ஆழ்குழாய் அகழ்கின்ற தொழிலில் இருப்பவர் கூறியதைச் சொல்கிறேன். தம் பகுதியில் ஆயிரம் அடிகளுக்குக் கீழே ஆழ்குழாய் தோண்டப்பட்டதாம். சிறிதளவே நீர் கிடைத்திருக்கிறது. அகழ்வு முடிந்தது. எல்லாரும் அகன்றிருந்த வேளையில், ஆழ்குழாய்க் கிணற்றருகே வைத்திருந்த டீசல் கொள்கலன் மண்நெகிழ்ந்து சாய்ந்துவிட்டது. டீசல் மொத்தமும் ஆழ்குழாய்க்குள் இறங்கிவிட்டது. இத்தவற்றால் ஆழ்குழாய்க் கிணறு பாழ்பட்டது என்று அகழ்ந்தவர் துயருற்று மறந்துவிட்டார். ஆனால், சில நாள்கள் கழித்து எண்பது கிலோமீட்டர்கள் தள்ளியிருந்த ஊரொன்றின் ஆழ்குழாய்க் கிணற்றில் வெளிப்பட்ட தண்ணீரில் டீசல் மிதந்ததாம். எங்கோ கலந்த டீசல் வெகுதொலைவுக்கு அப்பால் இருந்த கிணற்றில் தோன்றியிருக்கிறது. இதுதான் நிலத்தடி நீர்க்கால்களின் பயணம். இந்த நிகழ்வில் முன்பின் இருக்கலாம். ஆனால், அதன் சாரத்தை மறுக்கவியலாது.

காவிரி மணலில் இறங்கும் தண்ணீர்தான் தமிழகத்தின் நிலத்தடி நீர்வளத்தைப் பெருக்குகிறது. காவிரியில் நீரின்றேல் நம் காலடியில் நிலத்தடி நீர் இருக்காது. பற்பல மாநகரங்களுக்குக் குடிநீர் கிடைக்காது. காவிரிப் படுகைதான் தமிழர்களின் குருதிநாளம். இதை மறந்துவிடக் கூடாது! நமக்குரிய உரிமையைப் பெற ஒன்றுபட்டு நிற்கவேண்டிய நேரமிது.

வைகோவிற்கு கரம் கொடுப்போம், சேர்ந்தே போராடுவோம், வரும் தமிழக தலைமுறையினரை காப்போம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

ரயில் மறியல்-மதிமுக வினர் 500 பேர் கைது!

மதிமுக துணைப் பொதுச்செயலாளர் அண்ணன் மல்லை சத்யா அவா்கள் தலைமையில் ஏராளமான மதிமுக தொண்டா்கள் ரெயில் மறியல் செய்தனர். இதில் 500- க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். 

ரயில் மறியலில் தண்டவாளத்தில் தலை வைத்து மதிமுக தொண்டா்களை தலைநிமிர செய்த மதிமுக வின் வீர தீரன் அஞ்சா நெஞ்சன் அண்ணன் நிசாா் அவா்களுக்கு ஓமன் இணையதள அணி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 

வீரம் வெல்லட்டும். நமை கண்டு பகைவர் அஞ்சி ஓடட்டும்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

மதிமுக வாழ்நாள் உறுப்பினர் சேர்ப்பு வெளிநாட்டு தமிழர்களுக்காக!

தமிழை, தமிழினத்தை, தமிழ் நாட்டை நேசிக்கும், எனது அன்புக்கு இனிய தமிழ் உடன் பிறப்புக்களே வணக்கம்!

தமிழகத்தின் வாழ்வாதராங்களை காக்க தினமும் போராடியும், வெற்றியும் கண்டுகொண்டிருக்கின்ற ஒப்பற்ற தலைவன் வைகோவை வருகின்ற 2016 சட்டசபை தேர்தலில், முதலமைச்சராக அமர வைப்பதற்கு இப்போதே பணிகளை வேகமாக செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். இதற்கு உறுப்பினர் சேர்க்கை மிகவும் முக்கியமானது. 

எனவே ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் "வெளி நாடுகளில் வாழும்" தமிழ் உறவுகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராக தங்களை பதிவு செய்து கொள்ள விரும்பினால், இப்பதிவின் கீழ், கருத்து பதிவு செய்யும் இடத்தில், தங்களின் பெயர், முழு விலாசம், வண்ண புகைப்படம் (கடவுச்சீட்டு அளவு), அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை தெரிவிக்க அன்போடு கேட்டு கொள்கிறோம்.

கழகத்தின் அடிப்படை உறுப்பினராக எங்கள் மூலமாக சேர்வதற்கு "இலவசம்"
வாழ்நாள் உறுப்பினர் ஆவதற்கான கட்டணம் ₹ 500 மட்டுமே!

முக நூலில் (facebook) வெளிப்படையாக தங்களின் விபரங்களை தெரிவிக்க விரும்பாத தோழர்கள் எங்களுடைய தனிசெய்தியிலும் தங்களின் விபரங்களை தெரிவிக்கலாம்.

முகநூல் தனிசெய்தியில் தகவல்களை அனுப்ப முடியாதவர்கள் கீழ்குறிப்பிடப்படும் எண்ணை கொண்ட (whatsapp) வாட்ஸ்அப்-லும் தங்கள் முழு விவரங்களை அனுப்பி மதிமுக-வின் வாழ்நாள் உறுப்பினராகலாம்.

மதிமுகவின் வாழ்நாள் உறுப்பினரக சேர தகவல் அனுப்பிய முதல் இருபத்தைந்து நபர்கள் தங்களுக்கான மதிமுக வாழ்நாள் உறுப்பினர் அட்டையை, தாங்கள் தமிழகத்தில் குறைந்தது 10 பேராவது இருக்கும் பட்சத்தில், மதிமுக பொதுச்செயலாளர் தலைவர் வைகோ அவர்களின் பொற்கரங்களால் பெற்று கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.

தொடர்புக்கு,

அலைபேசி இலக்கம்: +96895484987
மதிமுக இணையதள அணி - ஓமன்

Friday, March 27, 2015

தினசாி நாளிதழ் சந்தா சேகாிக்கும் நிகழ்ச்சி-வைகோ பங்கேற்பு!

விருதுநகரில் மே 1 முதல் வெளியாகவிருக்கும் தினசரி நாளிதழுக்கான வருட சந்தா சேர்ப்பு நிகழ்ச்சியில், மதிமுகவின் பொதுச்செயலாளர் தலைவா் வைகோ பங்கேற்று சிறப்பித்தாா்.

மதிமுக தோழர்களே, நாமும் அனைவரும் வருட சந்தா செலுத்தி இருட்டடிப்பு செய்யப்படும் தலைவரின் செய்திகளை தினசரி நடுநிலை நாளேடான வரவிருக்கும் நாளிதழ் மூலம் தமிழக மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்க முயற்ச்சி எடுப்போம். தலைவர் வைகோவை 2016 ல் முதலமைச்சராக்கும் வழிகளை தேர்ந்தெடுத்து பணியாற்றுவோம். வெற்றி பெறுவோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

வைகோவை மகனை போல நடத்திய தலைவருக்கு பாரத ரத்னா!

அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் ஆட்சி காலத்தில் அனைத்து தர மக்களையும் ஒற்றுமையோடு வழி நடத்தி பெரும்புகழை பெற்ற ஒப்பற்ற தலைவர். ஈழத்தில் வாழுகின்ற நம்முடைய தமிழ் மக்களுக்கு அரணாக விழங்கியவர். தலைவர் வைகோவை தன் சொந்த மகனை போல நடத்திய உத்தமர். வைகோ அவர்கள் தமிழீழ மக்களுக்காக, அவர்களின் பிரச்சனைகளுக்காக ஓடோடி வாஜ்பாய் அவர்களிடத்தில் செல்லும்போதெல்லாம் கரிசனையோடு தலைவர் கூறுவதை கேட்டு உதவி செய்யும் உருகிய மனம் படைத்த வள்ளல். வைகோ அவர்களின் மீது தனி மரியாதை கொண்டவர் என்பதால், வைகோ அவர்கள் டெல்லி செல்லும்போதெல்லாம், வாஜ்பாய் அவர்களை சந்தித்து நலம் விசாரிப்பார். அவர் பேச முடியாமலிருப்பது தலைவருக்கும் அவர் வழியில் நடக்கின்ற மதிமுக தொண்டர்களுக்கும் வேதனையே. இருந்தாலும் சிறப்பு மிக்க ஒரு உன்னதமான தலைவனுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது கிடைத்தது மகிழ்ச்சியே.... வாஜ்பாய் அவர்கள் பூரண நலத்துடன் வாழ எங்கள் வேண்டுதல்கள் இறைவனிடத்தில் எப்போது உண்டாகும்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

நியூட்ரினோ தடை- செய்தியாளர்களை சந்தித்தார் வைகோ!

நியூட்ரினோ திட்டத்துக்கு மதுரை உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததையடுத்து, அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்ற நியூட்ரினோ எதிர்ப்பு இயக்க இருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச்செயலாளருமான திரு.வைகோ அவர்கள் இது குறித்து மதுரையில் நேற்று மாலை 6 மணிக்கு, மதுரை புறநகர் மதிமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அதற்கு முன் அங்கு வைக்கப்பட்டிருந்த பெரியார் மற்றும் அண்ணாவின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அண்ணன் புதூர் பூமிநாதன்,  மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் அண்ணன் சரவணன் உள்ளிட்டோ் உடனிருந்தனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

Thursday, March 26, 2015

நியூட்ரினோ-க்கு உயர் நீதிமன்ற தடை. வைகோ-க்கு வெற்றி!

தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு அமைக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்திற்கு தடைவிதிக்கக்கோரி மதிமுக செயலாளர் வைகோ உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், நியூட்ரினோ ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டால், நீர், நிலம், காற்று ஆகியவை பாதிக்கப்பட்டு இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இந்தப்பகுதியை சுற்றியுள்ள அணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் வைகோ தெரிவித்திருந்தார். மேலும், வனவிலங்குகள், விவசாயமும் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த ஆய்வு மையத்திற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெறவில்லை என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் நியூட்ரினோ ஆய்வு மையம் செயல்படுவதற்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டனர். மேலும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறும் வரை ஆய்வுப்பகளை தொடரக்கூடாது எனவும் உத்தரவிட்டனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

மார்ச் 28 ல் முழு அடைப்புப் போராட்டம் - மதிமுக பங்கேற்பு!

தமிழகத்தின் உயிர் வாழ்வாதாரங்களில் ஒன்றான காவிரி நதியின் குறுக்கே, மேகதாது, ராசி மணல் ஆகிய இரு இடங்களில் கர்நாடக அரசு அணைகள் கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டியது தமிழக மக்களின் தலையாய கடமை ஆகும்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிராகவும், சட்டத்துக்கு விரோதமாகவும் அணைகள் கட்ட முற்படும் கர்நாடக அரசைத் தடுக்க வேண்டிய நரேந்திர மோடியின் மத்திய அரசு, தமிழகத்துக்கு வஞ்சகமாகத் துரோகம் விளைவிக்கும் போக்கு நீடிக்கின்றது.

எனவே, காவிரிக்குக் குறுக்கே கர்நாடகம் அணைகள் கட்டுவதைத் தடுக்க, காவிரி டெல்டா பகுதி விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு 28 ஆம் தேதி தமிழகத்தில் நடத்த இருக்கும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு தருவதுடன், தமிழக மக்கள் குறிப்பாக விவசாயிகள், வணிகப் பெருமக்கள், தொழிலாளர்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்யுமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த போராட்டத்தை தமிழக அரசும் ஆதரித்து, நீர் வள பாசனத்துறை அமைச்சர் அவர்கள் ஆதரவான அறிக்கை விடவேண்டுமென கேட்டு கொள்கிறோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

Wednesday, March 25, 2015

2015-16 தமிழக நிதிநிலை அறிக்கையால் பயன் இல்லை-வைகோ!

தமிழக முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள 2015-16 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்களோ, மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற அறிவிப்புகளோ எதுவும் இடம் பெறவில்லை. இந்த நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டவை அனைத்தும், கடந்த நான்கு ஆண்டு காலமாக அறிவிக்கப்பட்டவைதான்.
தமிழகத்தில் வேளாண் மற்றும் தொழில்துறைகளின் உற்பத்தி வளர்சசி இலக்குகளை எட்டாமல், மாநிலத்தின் மொத்த வளர்ச்சி 9 விழுக்காடு அளவைத் தாண்டிவிடும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
மாநிலத்தின் சொந்த வரி வருவாய் நடப்பு ஆணடில் 2140 கோடி ரூபாய் குறையும் என்றும், மத்திய அரசின் நிதிப் பகிர்வின் மூலம் தமிழகத்துக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். அப்படியானால், நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஆதாரம் எங்கிருந்து கிடைக்கும் என்று தெரியவில்லை.
காவல் துறைக்கு 5568.8 கோடி ரூபாய்; வேளாண்மைத் துறைக்கு ரூபாய் 6613 கோடி;
அதிமுக அரசு விவசாயத் துறைக்கு அளித்துள்ள முக்கியத்துவம் எத்தகையது என்பதைக் காட்டுகிறது.
கடந்த காலத்தில் இரண்டாவது பசுமைப் புரட்சி என்ற ஆரவார அறிவிப்பு என்ன ஆனது என்றே தெரியவில்லை?
வேளாண் தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்க வேளாண் இயதிரமயமாக்கும் திட்டம், குளிர்பதன சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல் போன்றவை வெற்று அறிவிப்புகளாகவே இருக்கின்றன.
கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூபாய் 3500, நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 3000 வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் வைத்த கோரிக்கையை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. இந்த நிதிநிலை அறிக்கையிலும் எந்த அறிவிப்பும் இல்லாதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.
தஞ்சையில் மீத்தேன் எரிவாயுத் திட்டம், தேனியில் நியூட்ரினோ திட்டம் குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு பற்றி முதல்வர் அறிவிக்காதது ஏன்?
மின்சாரத் தேவையை நிறைவு செய்து இருப்பதாக முதல்வர் பாராட்டிக் கொள்வதில் அர்த்தம் இல்லை. மின் உற்பத்தித் திட்டங்களை தொலைநோக்குப் பார்வையுடன் விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல், அதிக விலை கொடுத்து மின்சாரத்தைத் தனியார் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்தது சாதனையா?
செய்யாறு, உடன்குடி மின்சாரத் திட்டங்கள் நான்கு ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது ஏன் என்று முதல்வர் விளக்கம் அளிக்கவில்லை.
பல்வேறு இலவசத் திட்டங்களுக்கு சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கிவிட்டு, மின்சாரத்துறைக்கு 13,586 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கீடு செய்து இருப்பதன்மூலம், மின்சாரத்துறையில் தமிழகம் தன்னிறைவு அடைய வழி இல்லை.
மக்கள் நலவாழ்வுக்கு 8248 கோடி ரூபாய் ஒதுக்கீடு மிகவும் குறைவு. மொத்த ஒதுக்கீட்டில் சுகாதாரத் துறைக்கு 10 விழுக்காடு அளவு அளித்ததால்தான் பெருகி வரும் மருத்துவத் தேவைகளை நிறைவு செய்ய முடியும். ஆனால், வெறும் 4.52 விழுக்காடு மட்டுமே ஒதுக்கீடு செய்து உள்ளனர்.
கடந்த நான்கு ஆண்டுகளில் 31,206 கோடி ரூபாய்க்குத் தொழில் முதலீடுகள் பெறப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. இதனால் எத்தனை ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்துள்ளது என்பதையும் அரசு விளக்க வேண்டும்.
அந்நிய நிறுவனங்களான நோக்கியா, பாக்ஸ்கான் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால், 12 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதுபற்றி நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் பின்தங்கி உள்ள தமிழ்நாட்டில் ஒற்றைச்சாளர அனுமதி மூலம் இனி தொழில்துறை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லப்படும் எனறு முதல்வர் கூறுவது எப்டி சாத்தியமாகும் என்று தெரிவிக்கவில்லை. நான்கு ஆண்டுகளாக தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு அதிமுக அரசு எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.
2011 இல் அதிமுக ஆட்சி பொறுப்பு ஏற்றபோது, மாநிலத்தின் கடன் ஒரு இலட்சம் கோடி ரூபாயாக இருந்தது. நான்கு ஆண்டுகளில் அரசின் கடன் 2 இலட்சத்து 11 ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது.
இதுதான் நான்கு ஆண்டு கால அதிமுக அரசின் சாதனை ஆகும்.
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகின்றன. இதற்குக் காரணமான மதுக்கடைகளை மூட வலியுறுத்தி நாடெங்கும் மக்கள் நடத்தும் போராட்டங்களை அதிமுக அரசு அலட்சியப்படுத்தி வருகிறது. வருமானத்திற்காக டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறந்து வைத்துள்ள அரசு, கிரானைட் கொள்ளை, தாது மணல் கொள்ளை மற்றும் மணல் கொள்ளை மூலம் பல இலட்சம் கோடி ரூபாய் தமிழக அரசின் கருவூலத்துக்கு வரவேண்டிய வருவாய் இழப்பு ஏற்பட்டதற்கு ஊழல்களும், அரசு நிர்வாகத்தின் முறைகேடுகளும்தான் காரணம் என்பதை உணரவில்லை.
அதிமுக அரசின் நிதிநிலை அறிக்கையால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை!

மதிமுக இணையதள அணி - ஓமன்

மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் வைகோ வாழ்த்து!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் மறுமலர்ச்சி திமு கழகத் தோழர் இல்ல திருமணவிழாவில் கழகப் பொதுச்செயலாளர் தலைவர் திரு.வைகோ அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். இந்த மணவிழாவில் ஏராளமான கழக தொண்டர்களும், முக்கிய மதிமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மணமக்கள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, ஒற்றுமையுடனும், சந்தோசத்துடனும், விட்டுகொடுத்து, கொடையளித்து, பல்லாண்டு காலம் குழந்தை செல்வங்களோடு வாழ வேண்டுமென ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாகவும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

வலைதள கருத்துக்காக கைது செய்யும் மத்திய அரசின் 66-ஏ சட்ட பிரிவு செல்லாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு! அதை மீறி கைது செய்தால் நட்ட ஈடு வழங்கவும் உத்தரவு!

சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததற்காக கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. அத்துடன் இத்தகைய கைது நடவடிக்கைக்கு பயன்படுத்துகிற தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66-ஏ பிரிவு செல்லாது என்றும் உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. மத்திய அரசு 2008 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அதில் சேர்க்கப்பட்ட 66 ஏ பிரிவின் படி, சமூக வலைதளம், மின் அஞ்சல் போன்றவற்றின் மூலமாக அவதூறான கருத்துகளை பரப்புவோரை கைது செய்து 3 ஆண்டுகள் வரை சிறையிலடைக்க முடியும். இந்த 66 ஏ பிரிவின் படி நாடு முழுவதும் வலைதளங்களில் சர்ச்சை கருத்தை தெரிவித்த குற்றச்சாட்டின் கீழ் பலரும் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தேசிய பாதுகாப்பு, தீவிரவாத அச்சுறுத்தல் போன்ற விஷயங்களுக்கு மட்டுமே தகவல் தொழில்நுட்ப சட்டம் பயன்படுத்த முடியும். சமூக வலைதளங்களில் மாற்று கருத்துகள், விமர்சனங்களை வெளியிடுவது குற்றமல்ல. இந்திய குடிமகன் தனது அடிப்படை பேச்சுரிமையை பயன்படுத்துவதை தடுக்க முடியாது. இதை தடுக்கவும் மத்திய அரசு விரும்பவில்லை. இதற்கும் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவுகளுக்கும் தொடர்பில்லை. இருப்பினும், சட்டப் பிரிவு 66ஏ துஷ்பிரயோகம் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது என்ற காரணத்துக்காக மட்டுமே அதை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என குறிப்பிட்டுவிடமுடியாது என வாதிட்டார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், 66- ஏ சட்டப் பிரிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்த சட்டப்பிரிவு தெளிவானதாக இல்லை. அரசாங்கம் என்பது வரலாம், போகலாம். ஆனால் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது. அரசியல் சாசனத்தில், அனைவருக்கும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தை நேரடியாகப் பறிப்பதாகவே இது உள்ளது. இச்சட்டப்பிரிவில் உள்ள சில வார்த்தைகள் பொதுப்படையாக இருப்பது ஏற்புடையதல்ல. ஒருவருக்கு அவதூறாக தெரியும் விஷயம், மற்றவருக்கு அவதூறாக இல்லாமல் இருக்கலாம். எனவே இச்சட்டப்பிரிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66-ஏ ரத்தாகிறது என்று கூறினர். 

மதிமுக இணையதள அணி - ஓமன்

இந்தி இலவசம்; தமிழ் படிக்க கட்டணமா! வைகோ காட்டம்!

தென் ஆப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களுள் 60 விழுக்காட்டினர் தமிழர்கள் ஆவர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து 150 ஆண்டுகளாகத் தமிழர்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர். வெள்ளையர்களின் நிறவெறிக் கொடுமையை எதிர்த்து அண்ணல் காந்தி அடிகள் தென் ஆப்பிரிக்காவில் சத்யாகிரகப் போராட்டங்களை நடத்தியபோது தமிழ் மக்கள்தான் காந்தி அடிகளுக்குப் பெரும் துணையாக இருந்தனர். ஆனால், தென் ஆப்பிரிக்காவில் காந்தியார் நடத்திய சத்யாகிரகப் போராட்டத்தின் நூற்றாண்டு விழா நடைபெறுகின்ற நேரத்தில், தமிழர்களின் போராட்டம் இன்னமும் அங்கு தொடர்கிறது.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம், அங்குள்ள இந்தியர்களுக்கு இந்தி மொழியை இலவசமாகக் கற்றுத் தர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆனால், 2008 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மொழி இலவசமாகப் பயிற்றுவிக்கப்பட்டு வந்ததை நிறுத்திவிட்டு, இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்து உள்ளது.
இந்தியாவையும் தாண்டி உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட தேசிய இனங்களின் தாய் மொழியையும் பண்பாட்டுக் கூறுகளையும் இந்தித் திணிப்பு மூலம் அழிக்கும் முயற்சியில் மோடி அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டு தமிழுக்குச் செம்மொழி சிறப்பை அளித்துள்ள இந்திய அரசு, தமிழ் மொழியை வளர்க்கவோ, உலகப் பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கைகளை உருவாக்கி ஆராய்ச்சிப் பணிகள் பெருகிடவோ சிறு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடவில்லை. இந்நிலையில், மோடி அரசின் அதிகார மமதையின் காரணமாக, இந்திய அரசின் செலவில் தூதரகங்கள் மூலம் வெளிநாடுகளில் இந்தி மொழியை மட்டும் கற்றுத்தரத் திட்டமிட்டு இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும்.
இந்தியக் கூட்டு ஆட்சித் தத்துவத்தின் பன்முகத் தன்மைகளுக்குக் கேடு விளைவிக்கும் வகையில் பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன என்பதற்கு தென் ஆப்பிரிக்காவில் இந்தித் திணிப்பும் ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.
உலகில் தொன்மைச் சிறப்பும், இலக்கிய இலக்கண வளமையும் நிரம்பிய தமிழ் மொழியை அயல்நாடுகளில் உள்ள தமிழர்கள் கற்றுத் தேர்ந்து தமிழ் மொழியின் சிறப்பைப் பேணிப் பாதுகாத்திட, தமிழ்நாட்டை ஆட்சி செய்த தி.மு.க., அ.தி.மு.க., இரண்டு கட்சிகளுமே உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வேதனை தருகிறது.
தமிழக அரசின் அலட்சியத்தால், மத்திய அரசு தமிழ்மொழியின்பால் பாராமுகமாக இருப்பது மட்டும் அன்றி, தூதரகங்கள் மூலம் வலிந்து இந்தியைத் திணிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தென் ஆப்பிரிக்காவில் இந்திய மொழி கற்பித்தலில் இருக்கும் பாரபட்சமான அணுகுமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, தென் ஆப்பிரிக்கத் தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு, தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
அயல்நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் தமிழ்மொழியைக் கற்பதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை மத்திய அரசு உடனடியாக ஏற்படுத்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
‘தாயகம்’ வைகோ 
சென்னை - 8 பொதுச்செயலாளர்,

மதிமுக இணையதள அணி - ஓமன்

Tuesday, March 24, 2015

வைகோ தலைமையில் ஏப்ரல் 4-ல் சங்கரன்கோவில் நூல் வெளியீடு!

கடந்த 20 க்கும் மேலான வருடங்களாக மதிமுக பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய தலைவர் திரு வைகோ அவர்களின் வாய்மொழிகளை தட்டச்சு செய்து வரும் அருமை அண்ணன் அருணகிாி அவா்களின் ஆக்கத்தில் வரும் ஏப்ரல் 4-ம் தேதி சங்கரன்கோவில் வரலாறு நூல் வெளியிட்டு விழா தலைவா் வைகோ அவா்கள் தலைமையில் நடைபெற இருக்கிறது. இந்த முத்தான நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் பகுதி மக்கள் அனைவரும் பங்கு பெற்று வரலாற்று சிறப்பு மிக்க பெருமைகளை, வெளியிடப்படும் சங்கரன்கோவில் நூல் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். எனவே அப்பகுதி மக்களும், கழக தொண்டர்களும் மற்றும் பிற அனைவரும் நூலை வாங்கி பயன் பெற அன்போடு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
மதிமுக இணையதள அணி - ஓமன்

Monday, March 23, 2015

நேதாஜி கருத்தரங்கு-வைகோ, சரத் யாதவ்,ஜெத் மலானி பங்கேற்பு!

இன்று மாலை டெல்லி தமிழ் சங்கத்தில் நேதாஜி இயக்கத்தின் சார்பில் நடந்த நேதாஜி மகிமை பற்றிய கருத்தரங்கில் ஐக்கிய தனதாதள தலைவர் மதிபிற்குரிய சரத் யாதவ் அவர்களும், பாரத தேசத்தின் மூத்த வழக்கறிஞர் சட்ட மேதை ராம் ஜெத் மலானி அவர்களும் மற்றும் முக்கிய தலைவர்களும் கலந்துகொண்டனர். 

இயக்கத்தின் தலைவர் திரு.வைகோ அவர்கள் தலைமை தாங்கினார். இதில் மறுமலர்ச்சி திமு கழக தலைவர்களும்,  தொண்டர்களும் மற்றும் இந்தியாவின் தலை சிறந்த தலைவர்களும் கலந்துகொண்டனர். 

மதிமுக இணையதள அணி - ஓமன்
 

பல்லாயிரம் மக்கள் மத்தியில் நடைபெற்ற ஈழத்தமிழர் மாமனிதர் இரா .நாகலிங்கம் அவர்களின் இறுதி வணக்கநிகழ்வு!

தமிழ் மொழியையும் தமிழின விடுதலையையும்  தனது இரு கண்களாக கொண்டு யேர்மனியில் பேரன் , பேர்த்தி கண்ட தமிழாலயங்கள் வளர்ச்சி முதல் தனது இறுதி மூச்சு வரை உழைத்த மாமனிதர் இரா .நாகலிங்கம் அவர்களின் இறுதி வணக்கநிகழ்வு பல்லாயிரம் மக்கள் மத்தியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது . 
புலம்பெயர் தேசமெங்கும் தமிழ்  மொழியும், கலையும், பண்பாடும், வரலாறுமே எமது இனத்தைக் தாங்கி நிற்கும் என்பதை எமது எதிர்காலச் சந்ததிக்கும், புலம்பெயர் தமிழர்களுக்கும் எடுத்தியம்பி தனது இறுத்திக்காலம் வரை உழைத்த ஆசானுக்கு யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இறுதி மரியாதை செலுத்தும் முகமாக  வித்துடல்   தாங்கி வரப்பட்டு மண்டபத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டது.

மாமனிதர் இரா .நாகலிங்கம் அவர்களின் வித்துடலுக்கு தமிழீழத் தேசியக் கொடி அணிவகுப்பு மரியாதையுடன் எடுத்து வரப்பட்டு போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
ஒரு தேசத்துக்காக தன்னை அர்ப்பணித்த ஒரு உன்னதமான மனிதருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் "மாமனிதர் " எனும் அதிஉயர் மதிப்பளிப்பு நடைபெற்றதை தொடர்ந்து மண்டபம் நிறைந்த பல்லாயிரம் மக்கள், ஆசிரியர்கள் , மாணவர்கள்  மாமனிதர் இரா .நாகலிங்கம் அவர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தி தமது இறுதி வணக்கத்தை தெரிவித்தனர் .
மாமனிதர் இரா .நாகலிங்கம் அவர்கள் தமிழ் மொழிக்காக ஆற்றிய பணியை தமிழீழத் தேசியத் தலைவர்  அவர்களால்  மதிப்பளிக்கப்பட்டதை மீண்டும் அரங்கம் நிறைந்த மக்களிடம் பதிவு செய்ததை தொடர்ந்து யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் சார்பாக   மாமனிதர் இரா .நாகலிங்கம் அவர்களுக்கான இரங்கல் உரைகளின் வரிசையில், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாகவும்   ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தமது நாட்டின் சார்பிலும்  இரங்கல் உரைகளையும்  நிகழ்த்தினார்கள். 
பழ.நெடுமாறன் ஐயாவின் மற்றும் புரட்சிக் கவிஞர் காசிஆனந்தன்அவர்களின் இரங்கல் உரையும் காணொளியில் காண்பிக்கப்பட்டது.
உறுதி உரை இடம்பெற்று தமிழீழத் தேசியக் கொடி ஒப்படைப்பு நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றதை தொடர்ந்து மாமனிதர் இரா .நாகலிங்கம் அவர்களின் வித்துடலை மண்டபம் நிறைந்த பல்லாயிரம் மக்கள் இருபுறம் நிரலில் நின்று மலர் தூவி வழி அனுப்பி வைத்தார்கள் .

மதிமுக இணையதள அணி - ஓமன்