கழகப் பொருளாளர், துணைப் பொதுச்செயலாளர் ஒருவர் மற்றும் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் நால்வருக்கான தேர்தல்!
கீழ்க்காணும் பொறுப்புகளுக்கான தேர்தல் 26.02.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கோவை - 641 045, வரதராஜபுரம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகில், உப்பிலிபாளையம் மெயின் ரோடு, எண். 63 -இல் அமைந்து உள்ள ஸ்ரீ சாய் திருமண மஹாலில் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் நடைபெற இருக்கிறது.
தலைமைக் கழக நிர்வாகிகள்:-
தலைமைக் கழக நிர்வாகிகளான பொருளாளர், துணைப் பொதுச் செயலாளர் ஒருவர் ஆகிய பொறுப்புகளுக்கான ஒவ்வொரு வேட்பு மனுவும் பொதுக்குழு தகுதி பெற்ற பத்து (10) பேர் முன்மொழிந்தும், பதினைந்து (15) பேர் வழிமொழிந்தும் இருக்க வேண்டும்.
ஆட்சிமன்றக்குழு:-
ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்களாக நால்வர் (4) தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதற்கான ஒவ்வொரு வேட்பு மனுவும் பொதுக்குழு தகுதி பெற்ற அய்ந்து (5) பேர் முன்மொழிந்தும், அய்ந்து (5) பேர் வழிமொழிந்தும் இருக்க வேண்டும்.
பொதுக்குழு தகுதி:-
தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், தகுதி பெற்ற ஒன்றிய, நகர, பகுதிக் கழகச் செயலாளர்கள்.
தேர்தல் ஆணையாளராக கழக அமைப்புச் செயலாளர் திரு.ஆ.வந்தியத்தேவன் அவர்கள் செயல்படுவார்.
வேட்பு மனு நாள்
06.02.2017 திங்கள்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை
வேட்பு மனு பெறும் இடம்
தலைமைக் கழக அலுவலகம், தாயகம், எழும்பூர், சென்னை - 600 008
வேட்பு மனு திரும்பப் பெறுதல்
08.02.2017 புதன்கிழமை மாலை 3 மணி வரை
கட்டணம்
வேட்பு மனு விண்ணப்பப் படிவம் -- ரூ. 100/-
தலைமைக் கழக நிர்வாகி கட்டணம் -- ரூ. 10,000/-
ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் கட்டணம் -- ரூ. 6,000/-
இவ்வாறு மதிமுக தலைமை கழகமான தாயகம் வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment