சென்னை, திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள டி-1 காவல் நிலையம் அருகிலிருந்து புறப்பட்ட பேரணியானது, சென்னை கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு இன்று 03-02-2017 மாலை 5.30 மணி அளவில் சென்றடைந்தது.
இந்த பேரணியில் தொண்டர் படை கழக கொடியுடன், முன்னர் மலர் வளையமும், அண்ணா உருவ படமும் கொண்டு அமைதியாக ஊர்வலமாக ஒருவரின் பின் ஒருவராக வரிசையாக சாலையின் இரண்டு பக்கமும் சென்றனர். நடுவில் பொதுச் செயலாளர், மற்றும் கழக முன்னணி நிர்வாகிகள் சென்றனர். அவர்களை தொடர்ந்து மற்ற மதிமுகவினர் சென்றனர்.
வைகோ உள்ளிட்ட கழக முன்னணியினர் பேரறிஞர் அண்ணா சமாதியில் மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த இந்நிகழ்ச்சியில், கழக அமை தலைவர், துணை பொதுச் செயலாளர், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட, கழக முன்னணியினரும், கழகத் தோழர்களும் பங்கேற்றார்கள்.
மதிமுக மகளிரணியினர், மாநில துணை செயலாளர் மல்லிகா தயாளன் அவர்கள் தலைமையில், நீல நிற சீருடையில் ஏராளமானோர் கலந்துகொண்டது சிறப்பு பெற்றிருந்தது.
அறிஞர் அண்ணா நினைவுப் பேரணி முடிந்த பின்னர், கடமை கண்ணியம் கட்டுப்பாடு காத்து, சிறப்பிக்க உதவிய கழகத்தினருக்கு நன்றி கூறி விடை பெற்றார் வைகோ.
No comments:
Post a Comment