ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து இன்று 28-02-2017 அன்று நெடுவாசல் சென்று அதன் தீமையை விளக்கி கூறினார் வைகோ. அங்கே பேசும்போது,
தாய்மார்களே! பெரியோர்களே! தோழர்களே!
இரண்டரை வருடங்களுக்கு முன்பு நான் வந்து வட நாட்டுலேயும், ஆவணத்திலேயும், நெடுவாசலிலேயும், கரமகுடியுலேயும், கைகாச்சிலேயும் கட்சி கொடி கட்டாமல் வந்தேன் வேனில்.
வந்து சொன்னேன், மீத்தேன் காஸ் என்று வருது. நம் நிலம் கட்டடம் எல்லாம் இடிந்து போய்விடும். விவசாயம் நச்சு தண்ணியால் ஒரு பயிர் வளராது. நம்ம பிள்ளை குட்டிகள் பிச்சை எடுக்கவேண்டிய நிலை வரும்.
இதைஎல்லாம் எதிர்த்து மத்திய சர்க்காரை எதிர்த்து போராடணும்ணு சொல்லி 2.5 வருடத்திற்கு முன்னாடி ஊர் ஊராக வந்தேன். எல்லாக் கட்சி, திமுக, அண்ணா திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, பாஜக, பாமக எல்லோரும் கைத்தறி ஆடை போட்டாங்க. ஏனென்றால் நான் ஓட்டு கேட்கவில்லை.
யாருக்கு வேண்டுமென்றாலும் ஓட்டு போடுங்க. ஆனால் உங்கள் பிள்ளை குட்டிகள் நன்றாக இருக்க வேண்டும். உங்கள் பேரபிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டுமென்றால், நாம் இதை விரட்டவில்லையென்றால் நாம் அழிந்துவிடுவோம் என சொன்னேன்.
இப்போ அந்த மீத்தேனை விரட்டியாச்சு. நாங்கல் கோர்ட்டில் போய் போராடினோம். கமிட்டி போட்டாங்க. ஜெயலலிதா தமிழ்நாட்டுக்குள் விடமாட்டோம் என அறிவிச்சுட்டாங்க.
இப்போ அதையே வேறு ஒரு விதமாக கொண்டு வருகிறான்; சேல் காஸ், ஹைட்ரோ கார்பன் கேஸ் என.
ஆனால் விடமாட்டோம். இதை மீறி மெசினை கொண்டு வந்தால் உடைப்போம். வைகோ சொல்லிவிட்டு போய் விடமாட்டான், இதே ஊருக்கு கையில் சம்மட்டியோடு வருவான்.
போலீஸுக்கோ, துப்பாக்கிக்கோ நான் என்றைக்கும் பயந்தது கிடையாது. ஜனங்கள் ஒன்று சேர்ந்து தாய்மார்கள் திரண்டுட்டாங்களே, அப்புறம் சர்க்கார் என்ன பண்ண முடியும். ஆதலால் கவலை வேண்டாம். வரவிடமாட்டோம். பிரதமர் இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.
எந்த காரணத்தை கொண்டும் நம்ம தமிழ்நாட்டில் நம்ம தாய்மார்கள் இதை அனுமதிக்கமாட்டாங்க. வீட்டுக்கொரு வாலிப பிள்ளை வரட்டும். தமிழ்நாட்டில் எங்கேயும், ஹைட்ரோ கார்பனோ, மீத்தேன் காஸோ, சேல் காஸோ எடுக்க நாங்கள் அனுமதிக்கமாட்டோம். இதோட மூட்டையை கட்டீட்டு ஓடிடு.
நான் மீத்தேன்காரனுக்கு சொன்னேன். நீ ராத்திரிக்குள்ள ஊரை காலிபண்ணலணா ஆபீசை உடைப்போம் என சொன்னேன். ராத்திரியே அள்ளி போட்டு ஓடிப்போய்ட்டான் தஞ்சாவூரில்.
நீங்கல் யாருக்கு வேண்டுமென்றாலும் ஓட்டு போட்டுக்குடுங்க. கட்சி பேச வரல. எங்க கட்சி பெயரே நான் சொல்லமாட்டேன். ஆனா இந்த தமிழ்நாட்டை காப்பாத்தணும், உங்க பிள்ளை குட்டிகளை காப்பாத்தணும்ணா உங்களை போன்ற பெண்கள் லட்சகணக்கில் திரண்டுவிட்டால் எந்த சர்க்கார் வந்து மோத முடியும்.
அப்படிப்பட்ட முறையில் உங்களுக்கெல்லாம் பாராட்டுக்கள் தெரிவிக்கிறேன். எந்த காரணத்தை முன்னிட்டும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வரவிடமாட்டோம். உள்ளே எந்த எந்திரத்தையும் நாங்கள் அனுமதிக்கமாட்டோமென்பதை மோடி சர்க்காருக்கு உளவுதுறை தெரிவித்துவிடுங்கள். என மதிமுக பொதுச் செயலாளர் ஹைட்ரோ கார்பன் குழாய் பதிப்பை பார்வையிட்டு அங்கு குழுமியிருந்த பெண்கள் ஆண்கள் மத்தியில் பேசினார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment