மதிமுகவின்
பகுதி செயலாளர் ஜி.ஆர்.பி.ஞானம் மகன் திருமணத்தை நடத்தி வைத்த வைகோ!
சென்னை கொளத்தூர்
மதிமுக பகுதி செயலாளர் ஜி.ஆர்.பி.ஞானம் மகன் திருமணத்தை நேற்று 02-02-2017
மாலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சீர்திருத்த முறைப்படி, உறுதியேற்ப்பு
வாசகங்களை வாசித்து மணமக்களின் ஒப்புதலின்படி, மாலை எடுத்து கொடுத்து மணமக்களை
மாலையிட வைத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.
உடன்
மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, சட்டதுறை செயலாளர் தேவதாஸ் உள்ளிட்ட
மதிமுக நிர்வாகிகள், இணையதள அணி நண்பர்கள், மற்றும் கழக கண்மணிகள் ஏராளமாக கலந்துகொண்டு
மணமக்களை வாழ்த்தி திருமணத்தை சிறப்பித்தார்கள்.
இந்த
திருமணத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மெரீனா புரட்சி பற்றி சங்கொலியில் எழுதிய கடிதத்தை நூலாக்கி வழங்கும் விதமாக கொளத்தூர் பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் முகமது ரிலுவான் கான் அவர்கள் முயற்சியில்,
மெரினா புரட்சி புத்தகத்தை மதிமுக துணைப் பொதுசெயலாளர் மல்லை சத்யா அவர்கள் வெளியிட,
சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் தேவதாஸ் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
நிகழ்வில் வெளியிடப்பட்ட மெரினா புரட்சி
நூல் திருமணத்தில் மணமக்களை வாழ்த்த வந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.
திருமணத்தை நடத்தி வைத்த தலைவர் வைகோ அவர்களுக்கு மணமக்கள் மற்றும் கொளத்தூர் பகுதி சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.,
மேலும் இணையதள
அணியினர் அம்மாபேட்டை கருணாகரன், கவிஞர் ரிலுவான் ஆகியோருக்கும் ஞானம் அவர்கள்
நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்கள்.
திருமணத்தில் மணமக்களை
வாழ்த்தி பேசிய வைகோ அவர்கள், திருமண விழாக்களில் தேவாரம் திருவாசகம் ஒலிக்க வையுங்கள். புரியாத மந்திரங்களை சொல்வதை விட இது நல்லது
என கூறினார்.
அண்ணாவின் திராவிட நாடு பெரியாரின் விடுதலை போன்ற பத்திரிக்கைகள்தான் கட்சியை வளர்த்தது.
அதுபோல் நம் கட்சி வளர அனைவரும் சங்கொலி வாங்குங்கள்.
மதிமுகவில் தலைவர்கள் இல்லை. அனைவரும் தொண்டர்களே
என வைகோ உருக்கமாக கூறினார்.
ஊர் கூடி தேர் இழுத்தால்தான் நகரும். வைகோ ஒருவர் உழைத்தால்
போதாது. அனைவரும் ஒன்று கூடி உழைத்தால், இந்த வருட இறுதிக்குள் மதிமுக வை அசைக்க முடியாத சக்தியாக மாற்றி காட்டுகிறேன் என வைகோ உறுதிபடி நம்பிக்கை தெரிவித்தார்.
நான் பொடாவில் இருந்து வெளியே வந்தபோது அரசியல் அதிசயம் என்று தலையங்கம் போட்ட விகடன்தான் இன்று என்னை கேலி செய்து கார்ட்டூன் போடுகிறது.
மணமக்களுக்கு இணையதள தோழர் வடசென்னை செல்வா குடும்பம் மற்றும் அம்மாபேட்டை கருணாகரன் அவர்கள்
குடும்பம் உள்ளிட்ட கழக இணையதள அணியினர் மணமக்களை வாழ்த்தி சிறப்பித்தார்கள்.
ஓமன்
மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment