விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சார்ந்த தமிழ்ச்செல்வன் மரணத்தையொட்டி, சென்னையில் நினைவு ஊர்வலம் நடத்தியதற்காக கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மீது, அப்போதைய தி.மு.க. அரசால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
எழும்பூர் 13ஆவது நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அல்லிக்குளம் வளாகத்தில் அமைந்துள்ள எழும்பூர் 13ஆவது நடுவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதற்காக இன்று 02.02.2017 காலை 10 மணிக்கு வருகை தந்தார்.
உடன் கழக முன்னணி தலைவர்கள் இருந்தார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment