துபாய் மறுமலர்ச்சி திமுக செயல்வீரர்கள் கூட்டம்
24/02/2017 அன்று வெள்ளிக்கிழமை மாலை
4 மணியளவில், திரு.N.தேவராஜ் அவர்கள் தலைமையிலும், திரு.கோ.திருப்பதி, மற்றும் திரு.G.ரமேஷ் அவர்கள் முன்னிலையிலும்,
திரு.G. எம்பெருமாள் அவர்கள் வரவேற்புரையாற்ற,
திரு.K. ஷாஜஹான் அவர்கள் நன்றியுரையாற்ற மிகச் சிறப்பாக
நடைபெற்றது.
கூட்டத்தில்
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
1.சீமைக்கருவேல மரங்களை அகற்ற தீவிர சட்டப் போராட்டம் நடத்தி தமிழக வாழ்வாதாரங்களை
காப்பாற்றிவரும் பொதுச்செயலாளர்
திரு. வைகோ அவர்களுக்கு நன்றியையும், பாராட்டுகளையும்
தெரிவித்துக் கொள்கிறது.
2.சமூக வலைத்தளங்களில்
இயங்குபவர்கள் சுயத்தை முன்னிலைப் படுத்தாமல் நமது இயக்கத்தையும், பொதுச்செயலாளரையும் மட்டுமே முன்னிலைப் படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
3. வாழ்நாள் உறுப்பினர் மற்றும் சங்கொலிச் சந்தா ஆகியவற்றை அதிகளவில் சேர்க்கும் நடவடிக்கையைத்
தீவிரப்படுத்துவது.
4. அமீரக சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டும், கழகத்திற்க்கு
அவப்பெயர் ஏற்ப்படாத விதத்திலும் நடந்து கொள்வது என்றும், அவ்வாறு மீறி செயல்படுபவர்கள் மீது நடவடிக்கையெடுக்க
தலைமையிடம் புகாரளிப்பது
என்றுதீர்மானிக்கப்படுகிறது.
5.எதிர்வரும் கழகத்தின் 24 ம் ஆண்டு துவக்க விழாவை பிரம்மாண்டமாக நடத்துவது என்றும், அவ்விழாவிற்க்கு தலைமைக் கழக நிர்வாகிகளை சிறப்பு விருந்தினராக
அழைப்பது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் விபரம்:-
அவைத் தலைவர் N.C. துரை, செயலாளர் வில்லிச்சேரி பாலமுருகன், பொருளாளர் L. லெனின் ஜோஸ் , துணைச் செயலாளர்கள் T. சேவியர்,KVM. வைகோமாரீஸ் மற்றும் கணேசன், சுரேஷ், சாகுல், அறந்தை அலி, G. காளிதாஸ், P. வெங்கடசாமி , ராஜ்குமார், சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
என துபாய் மதிமுக நிர்வாகிகள்
தெரிவித்தனர். இந்த கூட்டத்தை ஏற்ப்பாடு செய்து சிறப்பித்த கழக கண்மணிகள் அனைவருக்கும், சிறப்பான தீர்மானங்களை
நிறைவேற்ற காரணமாயிருந்த
நிர்வாகிகளுக்கும், மற்ற உறுப்பினர்களுக்கும் ஓமன் இணையதள அணி சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துதலையும்
தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
நன்றி சகோ
ReplyDelete