மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் கண்மணிகள் பொருளீட்டும் பொருட்டு அரபிக் கடலின் அலையோசையின் சத்தத்திற்கிடையில் பணியிலிருந்தாலும், தாயக கனவில்தான் நொடிபொழுதும் நினைவோடிருக்கிறது. அதை மெய்ப்படுத்தும் விதமாக துபாயிலும் கழக கண்மணிகள் ஒன்று கூடி மொழிப்போர் வீர வணக்க நாளை அனுசரிப்பு நடந்தேறியுள்ளது.
தமிழக வாழ்வாதாரங்களுக்காகவும், தமிழன் துயரை போக்க தமிழீழம் வேண்டுமென்பதற்காகவும், தமிழ்நாட்டின் ஊழியனாய் அயராது உழைத்துக்கொண்டிருக்கிற தமிழின முதல்வர் வைகோ அவர்களின் சிறப்பு அலைபேசி உரையோடு மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் தொடங்கியது சிறப்பாகும்.
தமிழ் மொழிக்காக்க இன்னியிர் ஈந்த மறவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி, மதிமுகவின் மாண்பை நிலைநிறுத்தியது போற்றுதலுக்குரியதாகும்.
உங்கள் தமிழ் பற்றும், கழக பற்றும் மேலோங்கட்டும். உங்கள் கடமைகளை செவ்வனே செய்ய, கழகமும் உங்களை உற்சாகப்படுத்தும். அவ்வண்ணமாக 10-02-2017 தேதி சங்கொலி பிரசுரத்தில் அங்கிகாரம் கொடுக்கும் விதமாக மொழிப்போர் தியாகிகள் துபாய் நிகழ்ச்சி செய்தி வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
துபாயில் பொறுப்பேற்றிருக்கிற நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்களுக்கும் மற்றும் ஏனைய இணையதள வேங்கைகள் அனைவருக்கும், ஓமன் இணையதள அணியின் பாராட்டுக்களையும், வாழ்த்துதலையும் தெரிவிப்பதோடு, இன்னும் சிறப்பாக களப்பணியாற்றி கழகத்தை கட்டிக்காக்கவும் உறுதியேற்க வேண்டுகிறேன்.
மறுமலர்ச்சி மைக்கேல்
ஓமன் மதிமுக இணயதள அணி
No comments:
Post a Comment