மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் இணையதள அணியின் கருவூலம் சகோதரர் தீபன் மற்றும் சங்கீதா திருமணம் மார்ச் மாதம் 2 ஆம் நாள் நடைபெறுகிறது.
உடுமலைபேட்டை போடிபட்டியில் அமைந்துள்ள கருணா கலையரங்கத்தில் நடைபெற உள்ள இந்த திருமணத்தை தமிழ்நாட்டின் ஊழியன் வைகோ அவர்கள் காலை 7.30-9.00 மணி சமயத்தில் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்துகிறார்.
மதிமுக அவை தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையேற்க்க, திருப்பூர் மாவட்ட மதிமுக செயலாளர் ஆர்.டி.மாரியப்பன் வரவேற்ப்புரையாற்றுகிறார்.
நன்றியரையை மணமகன் தந்தை புலவர் பழனிசாமி அவர்கள் தெரிவிக்கிறார்கள். கழக முன்னோடிகள், இணையதள வீரர்கள், கழக கண்மணிகள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு கழகத்தின் மாணிக்கத்தை மெருகேற்ற உங்கள் அனைவரையும் ஓமன் இணையதள அணியின் சார்பாக கேட்டுக்கொண்டு மணமக்களுக்கு திருமண நல் வாழ்த்துக்களை முன்னதானதாக தெரிவித்துக்கொள்கிறோம்.
இணையதள அணி சகோதரர்கள், இணையதள அணி ஒருங்கிணைப்பு கூட்டத்தையும் சிறப்பாக நடத்திட வேண்டுகிறோம்.
ஓமன் இணையதள அணி
No comments:
Post a Comment