பேரறிஞர் அண்ணாவின் 48-ஆவது நினைவுநாளை முன்னிட்டு இன்று 03.02.2017 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி அளவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெறுகிறது.
சென்னை, திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள டி-1 காவல் நிலையம் அருகிலிருந்து பேரணி புறப்பட்டு, சென்னை கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திற்குச் சென்றடைகிறது. இந்நிகழ்ச்சியில் கழக முன்னணியினரும், கழகத் தோழர்களும் பங்கேற்கிறார்கள் என மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதிமுக தோழர்கள் திரளாக கலந்துகொண்டு அண்ணா புகழை பரப்புமாறு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment