கன்னியாகுமரி மாவட்ட மதிமுக தொண்டர்அணி அமைப்பாளர் திரு.சுமேஷ் மற்றும் ஆன்சி வில்சன் ஆகியோர் திருமணம் 29-01-2017 ஞாயிற்று கிழமையன்று, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைத்து திருமணம் நடந்தது.
திருமண வரவேற்ப்பு நிகழ்வு 21-02-2017 செவ்வாய் கிழமை மாலை 5.30 மணி அளவில் கன்னியாகுமரி மாவட்ட தலைநகர் நாகர்கோயில், ராமன்புதூர், கார்மல் நகரில் அமைந்துள்ள ஜீசஸ் ஹாலில் நடக்கிறது.
இந்த வரவேற்ப்பு நிகழ்வில் தமிழகத்தை ஆபத்திலிருந்து காத்துக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் ஊழியன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்.
இந்த வரவேற்ப்பு அழைப்பிதழை சுமேஷ் அவர்கள், குமரி தொண்டரணி நிர்வாகிகளுடன், கடந்த வாரம் வைகோ அவர்களின் கலிங்கப்பட்டி வீட்டிற்கு நேரடியாக சென்று கொடுத்து அழைத்தது குறிப்பிடத்தக்கது.
கழக கண்மணிகள் அனைவரும் கலந்துகொண்டு தலைவரை வரவேற்று திருமண நிகழ்வு நடக்கும் இடத்திற்கு சென்று அழைத்து வருவதோடு, திருமண வரவேற்ப்பு நிகழ்விலும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்த அன்புடன் கேட்கிறோம்.
No comments:
Post a Comment