மதுரை புறநகர் வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில் 17-02-2017 மாலை 6 மணிக்கு, மதுரை மேற்கு (வ) ஒன்றியம், ஊமச்சிகுளம் என்னும் இடத்தில் இந்த சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.
பட்டிமன்ற தலைப்பானது, "தமிழர்களின் வாழ்வாதாரம் பண்பாட்டு அடையாளங்களை பாதுகாக்க 'வைகோ' பெரிதும் போராடியது, வீதிமன்றத்திலே! நீதிமன்றத்திலே! என்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மதுரை புறநகர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மதுரை சி.பூப்பாண்டி அவர்கள் தலைமையிலான நடந்த இந்த பட்டிமன்ற நிகழ்ச்சியானது பேராசிரியர் அரங்க நெடுமாறன் அவர்கள் நடுவராக கொண்டு நடைபெற்றது.
பட்டிமன்ற இரண்டு அணிகளின் ஒரு அணித்தலைவர் செந்தில்அதிபன், மற்ற அணி தலைவர் பொடா அழகுசுந்தரம் ஏற்றிருந்தார்கள்.
இதில் மதிமுக இளைஞர் அணி மாநில செயலாளர் ஈஸ்வரன், சென்னை ஆவடியின் செல்லப்பிள்ளை வழக்கறிஞர் அந்தரிதாஸ், தனமணிவெங்கடபதி, ராணிசெல்வி உள்ளிட்ட கழக முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றி சிறப்பாற்றினார்கள்.
No comments:
Post a Comment