நாகர்கோயில் இராமன்புதூரில் கன்னியாகுமரி மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் சுமேஷ் மற்றும் ஆன்சிவில்சன் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்வு இன்று 21-02-2017 மாலையில் ஜீசஸ் ஹாலில் வைத்து நடைபெற்றது.
இதில் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த நிகழ்வில், குமரி மாவட்ட செயலாளர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். நன்றியுரையை சுமேஷ் தம்பதியினர் வழங்கினார்கள்.
தமிழகம் முழுதுமுள்ள கழக கண்மணிகள் கலந்துகொண்டு மணமக்களை அனைத்து அணிகளின் சார்பிலும் வாழ்த்தினார்கள். ஓமன் மதிமுக இணையதள அணி சார்பிலும் மணமக்கள் ஆயிரம் ஆண்டு பல பேறு பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment