மதிமுக சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் அபிராமி கனகசபை அவர்களின்
தவப்புதல்வன்
பிரகதீஷ்
மற்றும்
காவேரி
ஆகியோரின்
திருமண வரவேற்பு நிகழ்ச்சி 10-02-2017 மாலை நாகையில்
நடந்தது.
இந்த திருமண வரவேற்ப்பு
நிகழ்வில் மதிமுக
பொதுச் செயலாளர்
வைகோ அவர்கள்
கலந்து
கொண்டு
மணமக்களுக்கு திருக்குறள் வழங்கி
வாழ்த்தினார்.
இந்த நிகழ்வுக்கு வந்த வைகோ அவர்களை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்,
நாகை எல்லையில் காத்திருந்து வரவேற்றனர்.
நிகழ்வில் உரையாற்றிய வைகோ அவர்கள், குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை சூட்டுங்கள். வாயில் நுழையாத சமஸ்கிருத பெயர்களை தவிருங்கள் எனவும் கூறினார்.
நான் அடுத்த தலைமுறையை பற்றி கவலைபடுகிறேன். இன்றைய தமிழக அரசியலைப் பற்றி எதுவும் சொல்ல மாட்டேன்.
கட்சிக் கொடி கட்டாமல் மீத்தேன் பற்றிய விழிப்புணர்வை செய்தேன்.
ஷேல் கேஸ் வரவிட மாட்டேன். கர்நாடகாவில் அணை கட்டும் பிரச்னையில் அதை தடுக்க தொடர்ந்து பாடுபடுவேன்.
ஷேல் கேஸ் வரவிட மாட்டேன். கர்நாடகாவில் அணை கட்டும் பிரச்னையில் அதை தடுக்க தொடர்ந்து பாடுபடுவேன்.
சீமைக்கருவேல மரங்களின் தீமைகள் பற்றி நோட்டீஸ் அச்சடித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவேன்.
தொலைக்காட்சி ஊடகங்கள் நமது வருங்கால திட்டங்களுக்காக மாலை வேளைகளில் ஒரு அரைமணி நேரம் நிகழ்ச்சி நடத்துங்கள் எனவும் வேண்டுகோள் விடுத்து வைகோ உரையாற்றினார்.
No comments:
Post a Comment