மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், தனது சொந்த கிராமமான கலிங்கப்பட்டியில் ஊர் மக்கள், கலிங்கப்பட்டி மேல்நிலை பள்ளி மாணவர்கள், SRN கல்லூரி மாணவர்கள் மற்றும் பல பள்ளி கல்லூரி மாணவர்கள் அனைவரும் சேர்ந்து சீமைக்கருவேல ஒழிப்பு பணியில் இன்று 4-2-2017 காலையிலிருந்தே ஈடுபட்டு அகற்றி வருகின்றனர்.
முன்னதாக அவர்களிடம் பேசிய வைகோ அவர்கள், கலிங்கப்பட்டி மக்களிடம் சீமை கருவேலம் மரம் பற்றிய தீமைகள், விளைவுகள், எப்படி அகற்றுவது, என்னென்ன ஆயத்த பணிகள் மேற்க்கொள்ள வேண்டும், நீதிமன்ற உத்தரவு போன்றவற்றை விளக்கி உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து அவரவர்கள் கொண்டு வந்திருந்த அருவாள் மற்றும் வெட்டும் உபகரணங்கள் அனைத்தையும் பயன்படுத்தி கருவேலமரங்களை அகற்றினார்கள். அவர்கள் அகற்றிய பின்னர், புல்டோசர் மூலம் வேரோடு புடுங்கி அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தனது கிராமத்தை தலைமுறையை காக்க, நீர் வளத்தை காக்க அனைத்து மக்களும் ஒன்றாக களத்தில் நின்று சீமைகருவேல மரங்களை அகற்றுவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment