சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கhக 2015 செப்டம்பர் 9-இல் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வைகோ தாக்கல் செய்த ரிட் மனு பல அமர்வுகளில் விசாரிக்கப்பட்டு, 2017 ஜனவரி மாதம் 10-ஆம் தேதி அமர்வில் நீதியரசர் செல்வம், நீதியரசர் கலையரசன் அவர்கள் 13 மாவட்டங்களிலும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு ஆணை பிறப்பித்தனர். மாவட்ட நீதிபதிகளின் கண்கhணிப்பில் அரசு துறை அதிகhரிகள் இந்தப் பணியைத் துரிதப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
அதன்பின்னர் தமிழ்நாட்டில் மீதம் உள்ள 19 மாவட்டங்களிலும் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கhக வைகோ தனியாக தாக்கல் செய்த ரிட் மனுவை ஏற்றுக்கொண்டு நீதியரசர்கள் செல்வம் அவர்களும், கலையரசன் அவர்களும் அந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தாக்கீது அனுப்பினர். நீதியரசர்களின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களிலும் உள்ள அனைத்துத் துறை அதிகhரிகள் 737 பேரையும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கhக தந்தி தொலைக்கhட்சியை 738-ஆவது தரப்பாகவும் சேர்த்து இன்று 27.2.2017 சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதியரசர்கள் செல்வம், கலையரசன் அவர்கள் அமர்வில் வைகோ தாக்கல் செய்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சம்பந்தப்பட்ட 738 பேருக்கும், அதில் தவறுதலாக விடுபட்ட திருவண்ணாமலை ஆட்சித் தலைவரையும் சேர்த்து 739 பேருக்கும் தாக்கீது அனுப்ப ஆணை பிறப்பிக்கப்பட்டது.
நீதியரசர் செல்வம் அவர்கள் தமிழக அரசு உடனடியாக சீமைக் கருவேல மரங்களை அகற்ற சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும், அகற்றுவதற்கு தேவையான நிதியை தாராளமாக வழங்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தார்.
வைகோ அவர்கள் நீதிமன்றத்தில் கடந்த அமர்வில் நீதியரசர்கள் அறிவித்ததற்கு இணங்க, இராமநாதபுரம் மாவட்டத்திலும், சிவகங்கை மாவட்டத்திலும் நேரடியாகச் சென்று பார்வையிட்டதில் நெடுஞ்சாலையின் இருபக்கமும் உள்ள சீமைக் கருவேர மரங்கள் பல இடங்களில் அகற்றப்படாததையும், 10 சதவீதம் வேலைதான் நடந்திருக்கிறது என்பதையும் நான் பார்வைiயிட்ட எட்டு கண்மாய்களில் முழுமையாக அடர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கhன எந்த வேலையும் நடக்கவில்லை என்பiயும், அதை அகற்றுவதற்குப் பொதுப்பணித் துறை, வனத்துறை அதிகhரிகள் மூலம் ஆயத்தப் பணிகள் நடைபெறுவதாக அரசு தரப்பினர் தெரிவித்ததாகவும் கூறினார்.
‘கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை தாலுக்கhவில், ஆரல்வாய்மொழி ஊரில் அகற்றப்பட்டுக் கhய்ந்து கிடந்த சீமைக் கருவேல மரக் குவியலில் விஷமிகள் தீ வைத்ததால், அருகில் இருந்த பிரேமா என்கிற விதவைப் பெண்ணின் வீடு முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டது. அந்த அபலைப் பெண்ணுக்கு 10 வயதில் பரமேஷ் என்கிற மகன் இருக்கிறான். வீட்டையும் இழந்து ஏழ்மையில் பரிதவிக்கும் அந்தக் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்குமாறு நீதியரசர்கள் ஆணை பிறப்பிக்க வேண்டும்’ என வைகோ கோரியபோது, நீதியரசர் செல்வம் அவர்கள் “அதற்கு பிரித்யோகமாக ஒரு மனு தாக்கல் செய்யுங்கள்; ஆவன செய்கிறோம்” என்று அறிவித்தார்.
பின்னர் வைகோ சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த கல்லூரிகளிலும், பள்ளிகளிலும், பொதுமக்களிடமும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினர் விநியோகித்த பிரசுர துண்டறிக்கைகளை ஆவணங்களாக நீதிதமன்றத்தில் தாக்கல் செய்தார். நீதியரசர் செல்வம் அவர்கள் “நீங்கள் செய்கிற பணி சமூக நலனுக்கான சேவை மட்டுமல்ல; தேசத்துக்குச் செய்யும் சேவை” என்று பாராட்டினார்.
என மதிமுக தலைமக் கழகமான தாயகம் இன்று 27-02-2017 வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமன் மதிமுக இணையதள அணி
என மதிமுக தலைமக் கழகமான தாயகம் இன்று 27-02-2017 வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment