மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணியின் 17 மாவட்டங்களின் மாநில -மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் 25.08.2016 காலை 11 மணிக்கு, சென்னை எழும்பூர் தலைமைக் கழகம் தாயகத்தில் மகளிர் அணி மாநிலச் செயலாளர் டாக்டர் ரொஹையா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தலைவரிடம் கொடுத்த நிதி 21500 மட்டுமல்ல, தலைவருக்கு பூங்கொத்து போல கொடுத்த பணத்தையும் சேர்த்து 23500 ஐ நிதியாக மகளிரணியினர் கொடுத்தரனர்.
மாநில மகளிரணி துணை செயலாளர் அக்கா மல்லிகா தயாளன் அவர்கள் தனது உரையில் நிதி தந்த ஒவ்வோர் மகளிரணியின் பங்கையும் நேர்மையாக எடுத்துரைத்தார்.
உறுதி குலையாமல் தடம் மாறாமல் இன்றளவும் தலைவர் வைகோ அவர்களை மகளிரணியினர் நம்பிக்கை யுடன் பின் தொடருகிறோம். உள்ளாட்சி தேர்தலையும் எதிர் கொள்ளவும் தயாராக இருக்கிறோம்.
ஒரு கட்சிக் கூட்டத்துக்கு போகணும்னா மகளிருக்கு பணம் பிரியாணி தந்து ஆள் சேர்க்கும் கட்சிகளுக்கு மத்தியில், கூட்டத்துக்கு வருவதோடு மட்டுமல்லாமல் தன்னால் இயன்ற நிதியையும் தரும் மகளிர் மதிமுக வில் மட்டுமே உண்டு. வைகோ ன்னா நேர்மை என மாநில மகளிரணி செயலாளர் டாக்டர் ரொகையா உரை நிகழ்த்தினார்.
அன்னை தெரசா பிறந்த இந்த தினத்தில் நடைபெறும் மகளிரணி நிர்வாகிகள் கூட்டத்திற்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்து துணை பொது செயலாளர் மல்லை சத்யா அவர்கள் பேசுகையில். திருச்சி அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் தலைவர் வைகோ அவர்களின் 53 ஆண்டு கால அரசியல் வாழ்வினை குறிக்கும் பொருட்டு 53 அடி உயர கழக கொடி க் கம்பம் அமைக்கப்பட உள்ளது. மகளிரணியினர் பெருமளவு கலந்துகொள்ள வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்தார்.
கழகப் பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது வைகோ அவர்கள் பேசும்போது, 6000 மைல் நடந்து வந்து செஞ்சேனையை கலைத்து அனைவரும் தூற்றிய பின்பு ஆறு மாத காலம் கழித்து நேரம் பார்த்து சென்ற சேனையை எல்லாம் அழைத்து சீனாவை கட்டமைத்த மாவோவை போல, நாம் மீண்டும் எழுவோம். விரைவில் கட்சி கட்டமைப்பை வலுவாக்குவோம் என எழுச்சியுரையாற்றினார்.
No comments:
Post a Comment