ஓமன் மதிமுக இணையதள அணியின் கலந்தாய்வு கூட்டம் இன்று 12-08-2016 மாலை 3.30 மணி அளவில் ஓமன் தலைநகரான மஸ்கட் மாநகரத்தின் ரூவி என்னும் இடத்தில் நவீன் ஹாலில் நடைபெற்றது. மறுமலர்ச்சி மைக்கேல் தலைமை வகித்தார். பல முன்னணி உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பாற்றினார்கள்
இந்த கூட்டத்தில், நடந்து முடிந்த 2016 சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி தோல்வியடைய மக்கள் மன பார்வை எவ்வாறு அமைந்தது. பண பலம்தான் தோல்வியின் முக்கிய காரணமா என பல்வேறு கோணங்களில் கலந்துரையாடப்பட்டது. மேலும் செப்டம்பர் 15 மாநாட்டு பங்களிப்பு பற்றியும் விவாதிக்கப்பட்டது.
அதன் படி சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,
தீர்மானம்-1:-
மக்கள் நலக் கூட்டணி தோல்வியடைந்தாலும் மக்கள் மனதில் நல்ல தலைவர்கள் தோல்வியடைந்துவிட்டார்கள். மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களை உண்மையாக முன்னெடுக்கிறார்கள் என்ற எண்ணம் வந்திருப்பது நமக்கு கிடைத்த வெற்றியாகும். தேர்தலில் ஒன்றிணைந்து பணியாற்றிய கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும் ஓமன் மதிமுக இணையதள அணி நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம்-2:-
வருகிற செப்டம்பர் 15 ஆம் நாள் திருச்சியில் நடக்கும் பேரறிஞர் அண்ணாவின் 108 ஆம் பிறந்த நாள் விழா மாநாடு நடைபெறுகிறது. அதற்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் சங்கொலியில் விளம்பரம் செய்ய இந்த கூட்டம் தீர்மானிக்கிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற இணையதள அணி உறுப்பினர்களின் விபரம் வருமாறு,
1. மறுமலர்ச்சி மைக்கேல்
2. வளன் ஆல்பின்
3. பிரேம் ஜாஸ்பர்
4. சத்ய பிரகாஷ்
5. ராதாகிருஷ்ணன்
6. நவநீதகிருஷ்ணன்
7. ராஜகுரு
8. கண்ணன்
9. செந்தில் குமார்
மேலும் கலந்தாய்வில் பங்கெடுக்க இயலாத உறுப்பினர்கள், வாட்சப் மற்றும் அலைபேசியின் மூலமும் தீர்மானங்களுக்கு ஆதரவளித்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment