தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் சிவசாமி அவர்கள் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன். மருத்துவம் பயின்றவரான இவர், விவசாயத் தொழிலில் அதிக ஆர்வமும், ஊக்கமும் உடையவராகத் திகழ்ந்ததால் விவசாயிகளின் அடிப்படைச் சிக்கல்களுக்குத் தீர்வுகhண வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார்.
எம்.ஜி.ஆர். ஆட்சியின் போது மின் கட்டண உயர்வை எதிர்த்து தமிழகத்தை உலுக்கிய மாபெரும் போராட்டத்தை நாராயணசாமி நாயுடு அவர்கள் நடத்தியபோது, அவருடன் தோளோடு தோள் நின்றவர் டாக்டர் சிவசாமி என்பதை மறக்க முடியாது.
அப்போது நடைபெற்ற போராட்டம்தான் தமிழக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்க முழு முதற் கhரணமாக அமைந்தது. நாராயணசாமி நாயுடு அவர்களோடு இணைந்து விவசாயிகளின் உரிமைப் போராட்டங்களில் முன்நின்ற பெருமை சிவசாமி அவர்களுக்கு உண்டு.
முப்பது ஆண்டுகளாக விவசாய சங்கத் தலைவராக செயல்பட்ட டாக்டர் சிவசாமி அவர்கள் இறுதி மூச்சு உள்ளவரை மங்கhத போர்க்குணத்துடன் விவசாயிகளுக்கhகப் போராடியவர் ஆவார். அவரின் மறைவு பொதுவாழ்வுக்கு, குறிப்பாக தமிழக விவசாயிகளுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
டாக்டர் சிவசாமி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், தமிழக விவசாயிகளுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என வைகோ தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment