வேலூர் மாவட்டம் ஆந்திர மாநில எல்லையான புல்லூரில் பாலாற்றில் குறுக்கே கட்டப்படும் தடுப்பணையை தமிழக வாழ்வாதாரங்களின் பாதுகாவலர் நதிகளின் நாயகர் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் இன்று 06-08-2016 காலை 9-00 மணி அளவில் பார்வையிட்டார்.
தடுப்பணையை தடுத்து நிறுத்த தமிழக மக்கள் போராடி வரும் சூழலில் அந்த அணையை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பார்வையிட்டு ஊடகயியலாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய வைகோ அவர்கள், தடுப்பணை தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் பிரதமரை நேரில் சந்தித்து தமிழகத்தின் நிலையை நிலையை விளக்க வேண்டும். அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த வேண்டும்.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புகிறேன் எனவும் தெரிவித்தார். இதே போல் காவிரிக்குக் குறுக்கே கட்டப்படும் தடுப்பணைகளும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும் வைகோ தெரிவித்தார்.
No comments:
Post a Comment