மதிமுகவின் தொழிலாளர் அமைப்பான மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் பொதுக்குழு கூட்டம் இன்று19-08-2016 காலை 10 மணி அளவில் மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடந்தது. மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பொதுச் செயலாளர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்கினார். கழக நிர்வாகிகள் உரையாற்ற தலைவர் வைகோ அவர்கள் சிறப்புரையாற்றினார்.
காரைக்கால் அமைப்பு சாரா தொழிற் சங்கத் தலைவர் எம்.ஈ.நிசார் பேசும் போது, சங்கம் வளர்ந்தால் கட்சி வளரும். எங்கள் சங்கத்தில் இருக்கும் மற்ற கட்சிகார்ர்களும் மதிமுகவுக்கு வந்து விடுவதாக விருப்பம் தெரிவிக்கிறார்கள். ஏனெனில் எதையும் எதிர்பாராமல் இயங்கும் ஒரே சங்கம் நம்ம MLF தான் என பெருமை பொங்க தெரிவித்தார்.
வைகோ பேரை சொன்னாலே சும்மா அதிருதுல்ல என மனசுக்குள்ள மகிழ்ச்சி ஷாக் அடிக்கிற மாதிரி மின் வாரிய தொழிற்சங்க நிர்வாகி திரு.க.இளங்கோவன் அவர்கள் உரையாற்றினார்.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் MLF தவிர்க்க இயலாத சக்தியாக இருந்து வருகிறதென அதன் நிர்வாகி சந்திரன் தெரிவித்தார்.
சென்னை கோயம்பேடு சந்தையில் பணியாற்றும் தொழிலாளத் தோழர்களுக்கு அரசு உதவிகள் அனைத்தும் கிடைக்க MLF பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
NLC பெயர் மாற்றத்தினை MLF பொதுக்குழு கண்டிக்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, அயல் பணி ஒப்பந்தத்தையும் எதிர்க்கிறது.
நினைவில் வாழுகின்ற ஐயா திரு.கன்னையண் திரு.செ.முத்து மற்றும் பேராசிரியர் அப்துல்லாதாசன் ஆகியோரின் நினைவு குறித்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
MLF சந்தித்த போராட்டக் களங்களை விளக்கி கழக அவைத் தலைவரும், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பொதுச் செயலாளருமான திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் உரையாற்றினார்கள்.
MLF ன் புதிய நிர்வாகிகளை திரு.வந்தியத்தேவன் அவர்கள் அறிவித்தார்கள்.
ஊடகயியலாளர்களுக்கு பேட்டியளித்த வைகோ அவர்கள், போட்டி சட்டமன்றம் நடத்துவது ஆரோக்கியமான அரசியல் அல்ல. 80 உறுப்பினர்கள் ஒருவார கால பதவி நீக்கத்தை பேரவைத் தலைவர் மறுபரீசிலனை செய்ய வேண்டும்.சட்டமன்ற பேரவைத் தலைவரின் கொடும்பாவி கொளுத்தப்பட்டதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவிக்கிறேன் என வைகோ தெரிவித்தார்.
தகவல்: இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன்
No comments:
Post a Comment