தமிழர்களின் நெடுநாளைய வேட்கையான ‘சென்னை உயர்நீதிமன்றம்’ என்ற பெயரை, ‘தமிழ்நாடு உயர்நீதிமன்றம்’ என்று மாற்ற தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் கொண்டுவந்து நிறைவேற்றிய தீர்மானத்தை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்று பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு சட்டமன்றத்தின் தீர்மானத்தை மத்திய அரசு உடனடியாக ஏற்றுக்கொண்டு செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
அதுபோலவே, உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக ஆக்கவும் தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment