நாகை நகர கழகத்தின் செயலாளர் M.G .ரகு அவர்கள் சாலை விபத்தில் 3 தினங்களுக்கு முன் மரணமடைந்தார். அந்த செய்தி கழக கண்மணிகளுக்கு நெஞ்சை உலுக்குவதாக அமைந்தது.
நேற்று 04-08-2016 அவர்களின் இறுதி சடங்கு நடந்தது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு மலர் மரியாதை செய்துவிட்டு ஊர்வலத்திலும் கண்ணீருடன் கலந்துகொண்டார்.
நாகை நகரச்செயலர் திரு ரகுஅவர்களின் ,மற்றும் இதர காட்சிகள்
பின்னர் நடந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் கழக பொதுச்செயலாளர் மாசற்ற தலைவர் வைகோ இரங்கல் உரை நிகழ்த்தினார்கள். இரங்கல் கூட்டத்தில் அவரது சகோதரர் அய்யாபிள்ளையுடன் தலைவர் இரங்கல் உரை நிகழ்த்தினார். இதில் துணைப் பொதுச்செயலாளர் துரை பாலகிருஷ்ணனன் மற்றும் காரை மாவட்டச்செயலர் ,திருவாரூர் மாவட்டச்செயலர் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் கட்சியின் நகரச்செயலகள்,ஒன்றிய செயலர்கள் தொண்டர்கள்,பொதுமக்கள் என் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment