Thursday, August 18, 2016

எழுச்சி தமிழருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

எங்கள் தலைவனை அண்ணனாக அரசியலில் அடியொற்றி நடக்கும் திருமாவளவன் அவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்க்கையையே அற்ப்பணித்து வாழ்ந்து வருகிறார். 

பூட்டிய சிறையின் சிறுத்தையே வெளியே வா என்று சொல்லும் அளவிற்கு ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அரணாக விளங்குகிறார். அவரின் பிறந்த நாள் நேற்று 17-08-2016 அனைத்து மதங்களையும் ஒரு சேர நினைப்பதால் மதசார்பின்மை பாதுகாப்பு மாநாடு நடத்தி கூட்டணி தலைவர்களான ஒருங்கிணைப்பாளர் வைகோ, முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரை வரவழைத்து பேச வைத்து மதசார்பின்மையை பாதுகாக்கிறார்.

அண்ணன் பொது நலன் காத்து ஒடுக்கப்பட்ட மக்களை உயர் நிலைக்கு இன்னும் உயர்த்த நல்ல ஆயுள் வேண்டி பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.

 ஓமன் மதிமுக இணையதள அணி


No comments:

Post a Comment