திரைப்படப் பாடலாசிரியர் நா. முத்துக்குமார் இன்று மஞ்சள் கhமாலை நோயால் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது மறைவு தமிழ்த் திரைப்பட உலகுக்கும் இலக்கிய உலகுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
மிகக் குறுகிய கhலத்தில் 1,500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உச்ச புகழைத் தொட்ட, இரண்டு முறை தேசிய விருது பெற்ற கவிஞரான முத்துக்குமாரின் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ எனும் பாடல் தந்தைக்கும் மகளுக்குமான உயரிய அன்பை வெளிப்படுத்தியது. அந்தப் பாடலைக் கேட்கிற ஒவ்வொரு தகப்பனின் உள்ளத்திலும் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கியது. இன்னும் திரையுலகில் மிகப் பெரிய சாதனைகளை அரங்கேற்றி தமிழ் உலகுக்கு பெருமை சேர்க்க வேண்டிய அந்த இளம் கவிஞர் நா. முத்துக்குமார் மறைவுக்கு எனது சார்பிலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெவித்துக் கொள்கிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment