ஆகஸ்ட் 14ல் சென்னை தாயகத்தில் மதிமுக இளைஞர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி ஆகிய முப்படைகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பங்கேற்கிறார்.
இந்த கூட்டத்தில் செப்டம்பர் 15 திருச்சியில் நடபெற இருக்கின்ற அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு மற்றும் வருகிற தமிழக உள்ளாட்சித் தேர்தலில் கழக அணிகளின் பங்களிப்பை பற்றி கலந்துரையாடப்படுகிறது.
இதில் அணிகளின் மாநிலத் துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், மாவட்ட துணை அமைப்பாளர்கள், தவறாது பங்கேற்கவும்.
மாணவர் அணியின் அங்கமான மறுமலர்ச்சி மாணவர் மன்றப் பிரதிநிதிகளும் பங்கேற்கலாம்.
கழகத்தின் மூன்று அணி நிர்வாகிகள் சீருடையுடன் பங்கேற்பது மிகவும் அவசியம். எனவே இப்போதே பயணத்திற்கு திட்டமிடுங்கள் என அணிகளின் நிர்வாகிகளை மாநில அணிகளின் நிர்வாகிகளான,
வே.ஈஸ்வரன்
மாநிலச் செயலாளர்
இளைஞர் அணி
மணவை தமிழ்மாணிக்கம்
மாநிலச் செயலாளர்
மாணவர் அணி
பாஸ்கர சேதுபதி
மாநிலச் செயலாளர்
தொண்டர் அணி
ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment