சென்னை - இராயப்பேட்டை, ஒய். எம். சி.ஏ திடலில் 17.08.2016 நேற்று மாலை நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பிறந்த நாளில் மதசார்பின்மை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்கள் மற்றும் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்றார்கள்.
நிகழ்வில் திருமாவளவன் அவர்களின் எடைக்கு எடை அம்பேத்கர் உருவம் பொறித்த பத்து ரூபாய் நாணயம் நிதியாக வழங்கப்பட்டது.
மேலும் நூல்கள் குறுந்தகடுகள் ஆகியவை தலைவர் வைகோ மற்றும் கூட்டணி தலைவர்களால் வெளியிடப்பட்டது. மேலும் வைகோ மற்றும் தலைவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
No comments:
Post a Comment