சென்னையில் இருந்து மதுரை செல்லும் வழியில் ரயில் பயணத்தில் காணாமல் போன மதிமுக பொதுக்குழு உறுப்பினர் விஷயத்தில் இரண்டு மணி நேரத்தில் உரிய உதவி செய்த ரயில்வே எஸ்பியை நேரில் அழைத்து வைகோ நன்றி தெரிவித்துள்ளார்.
மதுரையை சேர்ந்தவர் ஜகநாதன். மதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆவார். இவர் தனது நண்பர்கள் சிலருடன் கடந்த வாரம் சென்னை வந்து திருப்பதிக்கு சென்றார்.
பின்னர் சென்னை வந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று முன் தினம் புறப்பட்டவர் காலையில் 09-08-2016 மதுரையில் இறங்கவில்லை, வழியிலேயே அவர் மாயமானார். இது குறித்து ஜகநாதனுக்கு உறவினரான பத்திரிக்கை துறையில் உள்ள சிலர் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனாலும் ஜகநாதன் காணாமல் போனது குறித்து கட்சிக்காரர்கள் மூலம் மதிமுக இணைய தள பொறுப்பாளர் மின்னல் முகமது அலியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அவர் உடனடியாக வைகோ கவனத்துக்கு கொண்டு செல்ல வைகோ உடனடியாக இது குறித்து ரயில்வே எஸ்.பி ஆன்னி விஜயாவிடம் பேசினார். உடனடியாக களத்தில் இறங்கிய எஸ்.பி. ஆன்னி விஜயா போலீசாரை முடுக்கி விட உடனடியாக வழியில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களையும் தொடர்பு கொள்ள காணாமல் போன ஜகநாதன் திண்டிவனம் அருகே ஒளக்கூர் என்ற இடத்தில் ரயில் தண்டவாளம் அருகே பிணமாக கிடக்கும் தகவல் கிடைத்தது.
உடனடியாக ஜகநாதன் உடலை மீட்கவும் , பிரேத பரிசோதனை மற்ற நடைமுறைகளுக்கும் உதவ எஸ்.பி. ஆன்னி விஜயா உதவி செய்தார்.
இவை அனைத்தும் இரண்டு மணி நேரத்தில் நடந்தது. போலீசில் இப்படியும் உதவும் உள்ளமா , போனைப்போடு நான் உடனே பாராட்டணும் என்று ஆன்னி விஜயாவை போனில் அழைத்து அவரது முயற்சிக்கு வைகோ நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான முறையில் உதவிய ரயில்வே எஸ்பிக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிப்பதோடு, அவரது பணிகளில் உயரத்தை எட்டவும் வாழ்த்துதலை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment