கடந்த 9 ம் தேதி இரயிலில் இருந்து தவறி விழுந்து மதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர் இறந்தார். இதையொட்டி இன்று (16-08-2016) மாலை சென்னையிலிருந்து மதுரை வந்த கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், மறைந்த மதுரை ஜெகநாதன் அவருடைய இல்லம் சென்று அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அப்போது ஜெகநாதன் அவர்கள் துணைவியார் மற்றும் மகள் அவரது தாயார் தம்பிகள் அனைவருக்கும் ஆறுதல் தெரிவித்தார். உடன் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் தியாகவேங்கை புதூர் பூமிநாதன் மற்றும் மாநகர், புறநகர் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment