2017 மார்ச் மாதம் 4 ஆம் தேதி சனிக்கிழமையன்று ராமன்புதூர் ஜங்ஷனில் மாலை 6 மணியளவில் மதிமுக பொதுக்குழு விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மதிமுக வின் போர்படை தளபதிகளான கழக துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர்களும், தீர்மானக்குழுச்செயலாளர் கவிஞர் மணிவேந்தன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
மறுமலர்ச்சி வேங்கைகள், பொதுமக்கள், நடுநிலையாளர்கள், அனைவரையும் வருக! வருக! என நாகர்கோவில் நகர மதிமுக மற்றும் 49,50,51,52,வட்ட மதிமுக நிர்வாகிகள்,கழகத் தொண்டர்கள் சார்பாக வரவேற்கிறோம். இவண் :
நாகர்கோயில் நகரம் மற்றும் 49,50,51,52 வது வட்ட மதிமுக நிர்வாகிகள்,கழகத் தொண்டர்கள் தொண்டர்கள் இணைந்து நடத்திய இந்த பொதுக்கூட்டமானது கழகத்தின் 25 ஆவது பொதுக்குழுவின் விளக்கத்தை எடுத்து சொல்லும் பொதுக்கூட்டமாக அமைந்தது.
இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்திட பாடுபட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்களுக்கும் குமரி மாவட்ட மதிமுக சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துதலும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment