மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி இன்று 21-03-2017 தமிழ்நாடு முழுதும் மாவட்ட தலைநகரங்களில் மதிமுகவினரால் நடத்தப்பட்டது.
சென்னையில் நடந்த விழிப்புணர்வு பேரணி ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து தொடங்கி, சிந்தாதிரிபேட்டை கூவம் சாலை வரை சரியாக மாலை 5-09 க்கு ஆரம்பித்து 5-31 க்கு பேரணி நிறைவுற்றது.
பாதை முழுவதும் தன் உடல் நலம் பாதித்திருப்பதையும் கருதாமல், அவரே முழக்கமிடுகிறார். வேகமாக நடக்கிறார். கூட வரும் தொண்டர்களால் அவரது நடைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. 22 நிமிடத்திற்குள் நான்கரை கிலோ மீட்டர்கள் நடந்து பேரணி நிறைவு பெற்றது.
பொதுக்கூட்ட மேடையில் அமர்ந்து நிகழ்வு தொடங்கியதும் 70 நிமிடம் உரையாற்றி, அதில் மது ஒழிப்பு கண்டிப்பாக அமல்படுத்த வேண்டுமெனவும், மது ஒழிப்பு போராட்டத்தில் கலிங்க ப் பட்டி முன் மாதிரியாக விளங்குகிறது எனவும் பேசினார்.
மேலும் வேக த் தடை இருக்கும் இடங்களில் வண்ண பூச்சு செய்யுங்கள். எனவும் காவல்துறைக்கு வைகோ வேண்டுகோள் வைத்தார்.
பதவியில் இல்லாமலேயே மதுவிலக்கை நாடு முழுதும் அமுல் படுத்தும் வழியை மதிமுக ஏற்படுத்தி உள்ளது எனவும் வைகோ பேசினார்.
மேலும் ஜெனீவா கூட்டத்தில் மத்திய அரசு இலங்கை யை எதிர்த்து வாக்களிக்க வில்லை என்றால் மோடி ஒரு துரோகி என கல்லூரி கல்லூரி யாக சென்று பேசி மாணவர்களிடம் ஆதரவு திரட்டுவேன் எனவும் வைகோ உணர்ச்சி பொங்க உரையாற்றினார்.
No comments:
Post a Comment