மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் பாதுகாப்பு அதிகாரி சங்கரசுப்பு, உதவியாளர் மகாலிங்கம், சமையல் கலைஞர் மணி ஆகியோர், இன்று (22.3.2017) தாயகத்தில் தலைவர் வைகோ அவர்களைச் சந்தித்தனர்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவை, மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில், 30.3.2017 வியாழக்கிழமை அன்று, காமராசர் அரங்கில் சிறப்பாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
விழாவில் எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் சிறப்பிக்கப்படுகின்றார்கள். நடிகை சரோஜாதேவி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கின்றார்கள்.
அரசியல் கட்சி சார்பு அற்ற முறையில் இந்த விழா நடைபெறுகின்றது. தலைவர் வைகோ அவர்கள் விழாப் பேருரை நிகழ்த்துகின்றார்கள்.
கழக கண்மணிகள் மற்றும் எம்ஜிஆர் ரசிகர்கள், தொண்டர்கள் அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment