சிங்கள காடையர்களின் துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த தங்கச்சிமடத்தைச் சார்ந்த தம்பி T. K. பிரிட்ஜோ அவர்களிற்காக பொதுமக்கள் உண்ணா விரதம் இருக்கிறார்கள். இதில் கட்சிகளிற்கு அப்பார்பட்டு எல்லோரும் அதில் பங்கு பெற்றனர்.
அதில் நம் மறுமலர்ச்சி தி. மு. க. வின் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் குணா அவர்கள் தலைமையில் மதிமுகவினர் பொதுமக்களாக பங்கேற்றனர்.
அப்போது,
மகனை பறிகொடுத்த சோகத்தில் உள்ள பிரிட்ஜோ அவர்களின் தாயார் அவர்களிற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இன்று 08-03-2017 அன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
பின்னர் இரங்கல் உரையை மனம் உருகி, தாயின் வேதனையையும், குடும்ப வருத்தங்களையும் பகிர்ந்துகொண்டார் வைகோ.
ஓமன் இணையதள அணி சார்பில் பிரிட்ஜோ அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலும், குடும்பத்தாருக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment