மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக்குழுக் கூட்டம் 18.03.2017 அன்று திருச்சியில் நடைபெறுவதாக இருந்தது.
ஜெனீவா மனித உரிமை கவுண்சிலில், ஈழத்தமிழ் இனத்திற்கு எதிரான சதி நடைபெறுவதால், 18.03.207 சனிக்கிழமை காலை 11 மணிக்கு, சென்னை இலங்கை தூதரக முற்றுகையில் கழகப் பொதுச்செயலாளர் திரு வைகோ அவர்கள் பங்கேற்க இருக்கிறார்.
அதனால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக்குழுக் கூட்டம் 19.03.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு, சென்னை, தலைமை நிலையம், தாயகத்தில் கழக அவைத்தலைவர் திரு திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும் என மதிமுக தலைமை செயலகமான தாயகம் இன்று 17-03-2017 வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment