2017 பிப்ரவரி 27 முதல் மார்ச் 24 வரை ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் 34 ஆவது அமர்வு தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது. மனித உரிமைக் கவுன்சில் ஆணையர் ரவுத் அல் உசேனுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மின்னஞ்சல் மூலம் 2017 மார்ச் 13 இல் அனுப்பிய கடிதம்:
“மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சியாகும். ஈழத் தமிழர்கள் சார்பிலும், உலகத் தமிழர்கள் சார்பிலும் நீதி கேட்டு இக்கோரிக்கை மனுவினை அனுப்புகிறேன்.
2015 மார்ச் 2 முதல் 27 வரை ஜெனிவாவில் நடைபெற்ற 28 ஆவது ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மான எண் 30/1 இன்படி இலங்கை அரசு அப்பொழுது ஒப்புக்கொண்டபடி எதனையும் நிறைவேற்றாமல் நிராகரித்த நிலையில், இதுகுறித்து இலங்கை அரசுக்கு எந்தவித நீட்டியும் தரக்கூடாது என வேண்டுகிறோம். 2015 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுவதுமாகச் செயல்படுத்துவதாக இலங்கை அரசு வாக்குறுதி அளிக்கும் விதத்தில் தானும் முன் மொழிந்தது. போதுமான கால அவகாசமும், நீட்டிப்பும் கொடுக்கப்பட்டும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட எந்தச் செயலையும் இலங்கை அரசு முன்னெடுக்கவில்லை.
இனப்படுகொலைக்கு ஆளான ஈழத் தமிழர்களுக்கு பாதுகாப்பும், நீதியும் ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சில் செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்ற, இலங்கைப் பிரச்சினையை ஐ.நா.வின் பொதுச் சபைக்கு எடுத்துச் செல்லவும், பொதுச் சபை அதனை பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு செல்லவும் உரிய பரிந்துரையைச் செய்ய வேண்டும். அதன் மூலம் அகில உலக குற்றவியல் நீதிமன்றத்தில் இப்பிரச்சினை எடுத்துச் செல்லப்பட வேண்டும். மனிதகுலத்திற்கு எதிராக வடகொரியா நடத்திய கொலைக் குற்றத்துக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியதைப் போல இலங்கைப் பிரச்சினையில் “அனைத்துலக குற்றவியல் தீர்ப்பாயம்” அமைக்கப்பட வேண்டும்.
இலங்கை அரசுக்கு இதற்கு மேலும் கால நீட்டிப்பு கொடுத்தால் தமிழர்களின் பாதுகாப்பு ஆபத்துக்கு ஆளாவதோடு அதிகளவில் மனித உரிமைகள் நசுக்கப்படும் அபாயமும் உள்ளது.
இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்து, தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்முறை நடத்திய ஒன்றரை இலட்சம் சிங்கள இராணுவத்தினர் இனக்கொலையில் நொறுங்குண்ட மக்கள் மத்தியில்தான் இப்போதும் இருக்கிறார்கள். ஐ.நா.வினுடைய சிறப்புப் பார்வையாளர் அண்மையில் சமர்ப்பித்த அறிக்கையின்படி தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளும், மனித உரிமை மீறல்களும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 2009 மே மாதம் யுத்தம் முடிவுக்கு வந்ததாக சிங்கள அரசு அறிவித்த நாளில் இருந்து யுத்தத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொலைக் குற்றங்கள் குறித்து சுதந்திரமான அகில உலக விசாரணை நடைபெற வேண்டும் என்பதே தமிழர்களின் நியாயமான கோரிக்கை ஆகும்.
2015 மார்ச் மாதம் மனித உரிமைக் கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானம் தமிழர்களுக்கு ஓரளவு நம்பிக்கையைத் தந்தது. ஆனால், தமிழர்களுக்கு அதிர்ச்சியூட்டும் வண்ணம் இலங்கை அரசின் நடவடிக்கைகள் அமைந்தன. ஜெனிவா தீர்மானத்திற்கு எதிராகவே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. அனைத்துலக சமுதாயத்தின் கண்களில் மண்ணைத் தூவி ஏமாற்றும் விதத்தில் இதனைச் செய்து கொண்டே, 2009 முள்ளிவாய்க்காலில் மட்டும் ஆறு மாதத்தில் எழுபதாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா.வினுடைய ஆய்வறிக்கை கூறிய போதும், இந்த இனக் கொலைக் குற்றத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளும் நோக்கத்தில் இலங்கை அரசு கால நீட்டிப்பு கோருகிறது.
வெளிநாட்டு நீதிமான்களையும் போர்க்குற்றம் குறித்து விசாரிப்பதற்கு தீர்மானத்தில் ஒப்புக்கொண்டதற்கு நேர்மாறாக, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயும் தீர்மானத்திற்கும், குறிக்கோளுக்கும் எதிராக வெளிப்படையாகவே அறிக்கைகள் தந்தனர். இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை ராணுவத் தளபதி சரத்பொன்சேகாவிற்கு பீல்டு மார்ஷல் விருது கொடுத்து தமிழர்கள் நெஞ்சில் நெருப்பைக் கொட்டியது.
இலங்கை அரசின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா தற்போதைய அரசை இயக்குகின்றவர்களில் ஒருவராக உள்ளார். இவர் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கின்ற அலுவலகத்தின் மூலம் நாமே அந்த வேலையைச் செய்துகொள்ளலாம். யுத்த காலத்தில் நடைபெற்ற குற்றங்களை நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டிய தேவையே கிடையாது என்று அறிவித்தார்.
மனித உரிமைக் கவுன்சில் தீர்மானத்திற்கு எதிராக இலங்கை அரசு செயல்படுவதை ஐ.நா. மன்றம் தடுக்காவிட்டால் இது போன்ற போர்க் குற்றங்களையும், மனித உரிமை அழிவையும் இத்தகைய மனோபாவம் கொண்ட நாடுகள் செய்வதற்கு ஊக்கம் அளிப்பதாகவே அமையும். வடகொரியாவில் நடந்ததைவிட, இலங்கை அரசு தனது இராணுவத்தின் மூலம் தமிழர்களை படுகொலை செய்தது மிகவும் கொடுமையானது. வடகொரியா மனித உரிமைக் கவுன்சிலை உதாசீனம் செய்ததால், அந்நாடு நடத்திய கொலைக் குற்றங்கள் குறித்து ஐ.நா.வின் பொதுச் சபை கவனத்தில் எடுத்துக் கொண்டு, ஐ.நா.வின் பாதுகாப்புச் சபைக்கு பிரச்சினையைக் கொண்டு செல்லவும், அதன்படி அகில உலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு வடகொரியா பிரச்சினையை அனுப்புவதற்கான திட்டம் தற்போது பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கிறது.
இதே அணுகுமுறையை இலங்கைப் பிரச்சினையில் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் பின்பற்ற வேண்டுகிறேன்.”
இவ்வாறு வைகோ அவர்கள் இன்று 14-03-2016 அனுப்பிய தமது மின்னஞ்சல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
--------------------------------------------------------------------------------------------------------------------------------
13 March 2017
Dear Mr Zeid bin Ra’ad al-Hussein,
Vanakkam.
Sub: No Extension of time to Sri Lanka - Reg
Marumalarchi Dravida Munnetra Kazhagam is a registered political party in India.
We urge you not to give any extension of time to the Sri Lankan Government to fulfill its commitment to the unanimously adopted UN Human Rights Council Resolution 30/1 on accountability beyond its March 2017 deadline.
Sri Lanka voluntarily co-sponsored this Resolution and committed to fully implement the requirements of the Resolution by March 2017. Extensions and grace periods have been given already, but no progress has been made on any front.
The only way to protect the Eelam Tamils in Sri Lanka and give justice and safety to them is for the UN Human Rights Council to refer Sri Lanka to the UN General Assembly, along with a recommendation to the UN Security Council that Sri Lanka be referred to the International Criminal Court (ICC) or that an ad-hoc International Criminal Tribunal be created on Sri Lanka, similar to the procedure followed to assure accountability for North Korea's Crimes Against Humanity.
Tamil's safety will be in danger:
We fear that any extension of time will embolden and encourage Sri Lankan Government to commit human rights abuses against Tamils without any fear and Tamils safety will be in danger. Tens of thousands Sri Lankan Security forces who committed mass killings and sexual violence are still stationed in Tamil areas and live among the victims. There are numerous reports of current abuses against Tamils, including a recent report by UN Special Rapporteur on torture, cruel, inhuman or degrading treatment or punishment Mr. Juan Mendez.
Background:
Creating an international mechanism to prosecute war crimes has been the fervent wish and aspiration of the Tamils ever since the war ended in 2009. The Resolution passed by the UN Human Rights Council in 2015 gave a glimmer of hope that their wishes and aspirations would be fulfilled.
However, we observed with alarm and concern the attempts made by the Government of Sri Lanka and its leaders reneging on their own commitments incorporated in the Resolution which they co-sponsored. It is obvious that there is nothing ambiguous about the Government's strategies vis-à-vis the Geneva Resolutions. In its attempt to mislead and deceive the international community over and over again, Sri Lanka seeks to further delay the process, thus escaping from accountability for the mass killing and sexual violence of Tamils in 2009 in Mullivaikal, where according to the UN Internal Review report on Sri Lanka around 70 thousand Tamils were killed in six months.
After co-sponsoring the Geneva Resolution and agreeing to the creation of court comprising foreign and local jurists to investigate war crimes, Sri Lankan leaders have been acting contrary to the letter and spirit of the Resolution and their maneuvers are designed to frustrate and defeat the UNHRC process.
As Sri Lanka has accomplished almost none of the commitments it voluntarily made in 2015 to the UN Human Rights Council, any extension of time given to Sri Lanka beyond March 2017 will result in no accountability for war crimes and crimes against humanity it committed against Tamils.
No Political will:
Any number of years of extension will not yield any results, because there is no political will by successive Sri Lankan Governments to hold those committed gross abuses against Tamils accountable.
Volte - Face by Government Leaders:
In an affront to the UN Human Rights Council, the current Sri Lankan Government also made the military chief who commanded the troops during these atrocities, General Sarath Fonseka, a Cabinet member and gave him the highest military honor Field Marshal.
President Sirisena, Prime Minister Wickremasinghe and their Ministers have, individually and in unison rejected main aspects of the Resolution on different occasions, through state-owned media interviews and from public platforms.
Former President Chandrika Kumaratunga one of the powers behind the throne has in her recent press interview, impulsively laid open the government's plan. She has brazenly said that with the making of a new Constitution, and the establishment of the Office of the Missing Persons, "there would not be any necessity to have courts to probe war crimes" (Daily Mirror, 2nd Feb. 2017).
Will embolden other abusive countries to commit mass killings & Sexual violence:
The extension of Time to Sri Lanka will also embolden other abusive countries around the world to commit mass killings and sexual violence without any fear and follow Sri Lanka's example to evade UN Human Right's Council's Resolutions.
North Korea Example for Accountability:
In the case of North Korea, North Korea was only accused of committing Crimes against Humanity, but Sri Lanka was accused of committing both War Crimes and Crimes against Humanity.
Documented evidence against Sri Lanka is far more extensive, in-depth, and numerous in comparison to North Korea. Thousands of Tamil victims and witnesses are eager to testify.
Due to North Korea's inaction, the UN Human Rights Council referred North Korea to the UN General Assembly, urging the Assembly to recommend the UN Security Council to refer North Korea to the International Criminal Court (ICC). North Korea is in the UN Security Council's agenda now.
Thank you for your attention.
Yours Sincerely,
(Vaiko)
Mr. Zeid bin Ra’ad Zeid al-Hussein,
United Nations High Commissioner for Human Rights,
Geneva.
No comments:
Post a Comment