மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் ஏற்பாட்டில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா நேற்று (30.3.2017) வியாழக்கிழமை மாலை சென்னை காமராசர் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
வைகோ தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் நடிகை சரோஜாதேவி சிறப்புரை ஆற்றினார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.. அவர்களின் உற்ற நண்பர் பழநி ஜி.பெரியசாமி, ஏவிஎம் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், பின்னணிப்பாடசி பி.சுசீலா, புலவர் புலமைப் பித்தன், ஆயிரத்தில் ஒருவன் தொடங்கி எம்.ஜி.ஆரின் 15 படங்களுக்குக் கதை வசனம் எழுதிய ஆர்.கே. சண்முகம், 28 படங்களுக்கு வசனம் எழுதிய ஆரூர் தாஸ், முதல்வர் எம்.ஜி.ஆரின் அரசுச் செயலர்கள் வரதராஜன் ஐஏஎஸ், பிச்சாண்டி ஐஏஎஸ், சம்பத் ஐஏஎஸ், முதல்வர் எம்ஜிஆரின் தனி உதவியாளர்கள் மாணிக்கம், மணி, சங்கரசுப்பு, இராமகிருஷ்ணன், மகாலிங்கம் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிச் சிறப்பித்தனர்.
மு. செந்திலதிபன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
நடிகை சரோஜாதேவி, வைகோவுக்குப் பொன்னாடை அணிவித்தார்.
இயக்குநர் ஆரூர் தாஸ், எம்ஜிஆர் முகமும் பெயரும் பொறித்த சிறப்புச் சால்வையை அணிவித்தார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment