Wednesday, March 15, 2017

ராமநாதபுரம் மாவட்டத்தில் மல்லை சத்யா கொடியேற்றி சுற்றுபயணம்!

சேதுச்சீமையின் தலைநகராம் இராமநாதபுரத்தில் அரண்மனை (ராமலிங்க விலாஸ்) முன்பு நேற்று 14-03-2017 நண்பகல் 12-00 மணிக்கு நகர செயலாளர் வெல்டிங் சுப்ரமணியம் அவர்களின் ஏற்பாட்டின் படி கழக கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடை பெற்றது. 

அன்பிற்கு உறைவிடமும், ஓய்வு அறியாமல் கட்சிப் பணியாற்றும் மறுமலர்ச்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் மல்லை தந்த முத்து மல்லை சத்யா அவர்கள் கழக கொடியேற்றத்துடன் கழக கொடியின் முக்கியத்துவத்தையும் பொது மக்கள் முன் எடுத்துரைத்தார்கள். 

கழக கொடியை கட்டிக் கொண்டு ஆந்திரா செல்லமுடியாத நிலையிலும் கொடியவன் ராஜபக்சே திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வருகை புரிகையின் பொழுது உயிரையும் துச்சமாக மதித்து ஆந்திராவின் உலவுத்துறையின் கண்களில் மண்ணை தூவி நமது கழக கண்மணிகள் ராஜபக்சேயின் காரின் முன் பாய்ந்த செயல் பாட்டையும் தத்துவார்த்தமாக எடுத்துரைத்தார்.


இராமநாதபுரம் மாவட்ட கொடியேற்ற நிகழ்ச்சி முடிந்ததும் பரமக்குடியில் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் குணா அவர்களின் திருமண மண்டபத்தில் மாலை 5-00 மணிக்கு இனிதே மாவட்ட கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் வ. சாதிக் அலி அவர்கள் தலைமையில் ஆரம்பம் ஆனது. 

அந்த நிகழ்ச்சியில் தலைமை கழகத்தின் சார்பில் எதிரிகளிற்கு சிம்ம சொர்ப்பனமாகத் திகழும் கழக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா கலந்து கொண்டார்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் பங்கெடுத்துக் கொண்டனர்.


அப்பொழுது பேசிய மல்லை சத்யா அவர்கள், தலைவர் வைகோ அவர்கள் நீதிமன்றத்தில் வழக்காடி சீமைக்கருவேலம் மரங்களை அகற்றுவதற்கு வெற்றி பெற்று,அந்த மரங்களால் காற்றில் உள்ள ஈரப்பதம் உறுஞ்சப் படுவதையும் வானம் பார்த்த இந்த பூமியில் மழை காலங்கள் போல் இப்பொழுது மழை பொழிவதையும் கண் கூடாக காண்பதாக கூறினார். 

கல்விக்கூடம் சென்று பாடம்படிக்காத தருதலை சுடாலின் கருணாநிதியின் மகன் என்ற காரணத்தால் தமிழகத்தில் துணை முதல் அமைச்சராக இருந்த பொழுது தெறியாமல் மித்தேன் திட்டத்திற்கு கையொப்பம் இட்டதை, தலைவர் அவர்கள் அந்த திட்டம் செயல் பாட்டிற்கு வந்தால் உடைத்தெறிவோம் என்று ஆணையிட்டு அந்த திட்டத்தை தமிழகத்தில் நின்றும் விரட்டி அடித்ததையும் மேலும் வைகோ ஒருவர் பாராளுமன்றத்தில் இல்லாத காரணத்தால் தமிழன் எல்லா விதத்திலும் வஞ்சிக்கப் படுகிறார்கள் என்று கூறினார். 

மீனவர் பிறச்சினையிலிருந்து அனத்து விதமான பிறச்சினைகளையும் மாநில அரசும் முன்பிருந்த மாநில அரசுகள் செய்ததை தோலுரித்து காட்டினார்கள். 


வெற்றிடத்தை காற்று நிரப்பும் அதேபோன்று தமிழகத்தில் அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை தலைவரின் விடா முயற்சியால் மதிமுக நிரப்பும் என்றும், அதற்கு நாம் ஓய்வு இல்லாமல் செயலாற்றும் படி கேட்டுக் கொண்டார்.


தகவல்: சாதிக் அலி

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment