மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் சொந்த கிராமமான கலிங்கபட்டியில் இன்று 21.03.2017 காலை மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அதில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்து, பேரணியாகச் சென்றார்கள்.
இந்த பேரணியானது அன்னை மாரியம்மாள் மது ஒழிப்பிற்காக உண்ணாவிரதம் இருந்த இடத்தில் இருந்து தொடங்கி அண்ணா திடலில் நிறைவு பெற்றது. இதில் பெண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இப்பேரணியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
நிகழ்வில் நிறைவாக சிறப்புரையாற்றிய வைகோ அவர்கள், இந்திய அரசு இலங்கைத் தீர்மானத்தை எதிர்த்து ஓட்டுப் போட மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைத்ததோடு, தமிழகம் முழுவதும் மதுஒழிப்புப் பயணம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் மது ஒழிப்பை முற்றாக அமுல் படுத்திய கலிங்கப்பட்டி ஊராட்சி மன்ற தீர்மானத்தால், இந்தியாவிற்கே கலிங்கப்பட்டி வழிகாட்டியாக உள்ளதாக தலைவர் பெருமிதமடைந்தார்.
மேலும் அந்த கூட்டத்தில் ஊர்மக்கள் விரும்பிய படி,வைகோவின் குருநாதர் வழக்கறிஞர் ரெத்னவேல் பாண்டியன் வேண்டுகோள்படியும், ஊர்மக்கள் சார்பாக, மதுவிலக்கு போராளி அன்னை மாரியம்மாளுக்கு வெண்கல சிலை ஊர் முகப்பில் வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அந்த சிலையானது அவரது நினைவு நாளான நவம்பர் 6 ல் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முதல் நிதியாக, மாதம்தோறும் தனது இயன்ற நிதிய ஓய்வூதியத்தின் சேமிப்பு, மற்றும் உண்டியலில் சேகரிக்கும் தொகையை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களிடத்தில் கையளிப்பதற்காக வந்டஹ் கடலூர் மாவட்டம் மங்களூர் ஜெயராமன் அவர்கள், அன்னை மாரியம்மாள் வெண்கல சிலைக்காக 1000 அன்பளித்தார்கள். அதை பெற்றுக்கொண்ட தலைவர் வைகோ அவர்கள் பொறுபெடுத்துக்கொண்டவர்களிடத்தில் அந்த தொகையை வழங்கினார்.
No comments:
Post a Comment