உலக மகளிரை போற்றும் விதத்தில் உலக மகளிர் தின விழா 08-03-2017 அன்று மதிமுக மகளிரணி சார்பில் கோவில்பட்டியில், பாத்திமா திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.
இதில் மகளிரணியினர் அனைவரும் கலந்துகொண்டார்கள். சிறப்பு விருந்தினராக கழக பொதுச் செயலாளர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மேலும் வைகோ அவர்கள் நடனம் ஆடிய சிறுமியருக்கும், பெருமை சேர்க்கும் விதமாக பெண்களுக்கும் பரிசளித்து கவுரவித்தார்.
வைகோ அவர்களுக்கும் நினைவு பரிசை வழங்கி மகளிரணியினர் பெருமை சேர்த்தார்கள்.
இந்த உலக மகளிர் தின விழாவில், மதுவிலக்கு போராளி அன்னை மாரியம்மாள் மற்றும் உலக தமிழனின் உன்னத தலைவர், மேதகு வே பிரபாகரன் என்ற வீர தமிழ் மகனை பெற்றெடுத்த அன்னை பார்வதியம்மாள் ஆகியோரின் திரு உருவபடங்களும் திறந்து வைத்து கவுரவிக்கப்பட்டது.
கழக பொதுச் செயலாளர் சிறப்புரையாற்றினார். மேலும் நிகழ்வுக்கான புகைப்படங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment